Home> Lifestyle
Advertisement

LPG Cylinder Price: எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.250 அதிகரித்தது

எண்ணெய் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள், எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையை ரூ.250 உயர்த்தியுள்ளன. 

LPG Cylinder Price: எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.250 அதிகரித்தது

LPG Cylinder Price Hike:இன்று ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய விலையில் எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன.  எண்ணெய் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்கள், எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலையை  ரூ.250 உயர்த்தியுள்ளன. ஆனால், இந்த விலை உயர்வு சமையல் எரிவாயு சிலிண்டருக்கானது அல்ல. வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விலை தான் உயர்த்தப்பட்டுள்ளது. 10 நாட்களுக்கு முன்பு வீட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது  முன்னதாக மார்ச் 22ஆம் தேதி வர்த்தக சிலிண்டர்களின் விலையில் சிறிதளவு குறைந்தது.

5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 22 மார்ச் 22ம் தேதி மானியத்துடன் கூடிய உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. முன்னதாக, 6 அக்டோபர் 2021க்குப் பிறகு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் டீசல் விலை; இன்றைய விலை நிலவரம்.!!

முன்னதாக மார்ச் மாதம் 1ம் தேதி, உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்கள் டெல்லியில் ரூ.949.50 என்ற விலையிலும், கொல்கத்தாவில் ரூ.976, மும்பையில் ரூ.949.50, சென்னையில் ரூ.965.50 என்ற அளவிலும் விற்கப்பட்டு வந்தது.

வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படும், 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் டெல்லியில் மார்ச் 1ம் தேதி ரூ.2012க்கு கிடைத்தது, மார்ச் 22ல்  சிறிதளவு குறைந்து ரூ.2003 என்ற அளவில் விற்கப்பட்டது. ஆனால் இன்று முதல் டெல்லியில் ரூ.2253  என்ற அளவிலும், கொல்கத்தாவில் ரூ.2087க்கு பதிலாக ரூ.2351 ஆகவும், மும்பையில் 1955க்கு பதிலாக ரூ.2205  என்ற அளவிலும்,  சென்னையில் ரூ.2138க்கு பதிலாக ரூ.2406 என்ற அளவிலும் பணம் செலுத்த வேண்டும்

முன்னதாக மார்ச் 1ஆம் தேதி 19 கிலோ வணிக சிலிண்டரின் விலை ரூ.105 உயர்த்தப்பட்டு, மார்ச் 22ஆம் தேதி ரூ.9 குறைக்கப்பட்டது.

அக்டோபர் 2021 மற்றும் பிப்ரவரி 1, 2022 க்கு இடையில், கம்ர்ஷியல் சிலிண்டரின் விலை 170 ரூபாய் அதிகரித்துள்ளது. டெல்லியில் அக்டோபர் 1ஆம் தேதி கம்ர்ஷியல் சிலிண்டரின் விலை ரூ.1736 ஆகவும், 2021 நவம்பரில் ரூ.2000 ஆகவும், டிசம்பர் 2021ல் ரூ.2101 ஆகவும் இருந்தது. இதற்குப் பிறகு, ஜனவரியில் மீண்டும் மலிவாகி, பிப்ரவரி 2022ல் விலை குறைந்து ரூ.1907க்கு வந்தது. இதற்குப் பிறகு, இன்று அதாவது ஏப்ரல் 1, 2022 அன்று இதன் விலை ரூ.2253-ஐ எட்டியுள்ளது.

மேலும் படிக்க | Tips & Tricks: போலி பான் கார்டை கண்டறிவது மிகவும் சுலபம்! எளிய வழிமுறைகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More