Home> Lifestyle
Advertisement

பெண்களுக்காக எடையை குறைக்கும் அரசு! இது LPG சிலிண்டரின் Weight Loss

எல்பிஜி சிலிண்டரின் எடையை அரசு குறைக்க உத்தேசம்.... மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்....

பெண்களுக்காக  எடையை குறைக்கும் அரசு! இது LPG சிலிண்டரின் Weight Loss

புதுடெல்லி: எல்பிஜி சிலிண்டரின் எடையை அரசு குறைக்க உத்தேசித்திருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி சிலிண்டர்களின் எடையை குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. அதாவது 14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர்களின் எடை குறைக்கப்படும். 

14.2 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர்களை கொண்டு செல்வதில் பெண்கள் சந்திக்கும் சிரமங்களை மனதில் கொண்டு, அதன் எடையைக் குறைக்க பல்வேறு வழிகளை அரசு பரிசீலித்து வருகிறது. எல்பிஜி சிலிண்டர்கள் (LPG Cylinders) கனமானவை, அவற்றை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துவது கடினமாகிறது. குறிப்பாக பெண்கள் காஸ் சிலிண்டர் எடுத்துச் செல்வதில் சிரமப்படுகின்றனர்.

ஆனால் சிலிண்டரின் எடை குறைவாக இருந்தால் பெண்களுக்கு கையாள்வது எளிதாக இருக்கும். எனவே, விரைவில் அரசாங்கம் பெண்களின் வசதிக்காக எல்பிஜி சிலிண்டர்களின் எடையைக் குறைக்கலாம். எடை குறைந்தால், விலையும் குறையும்.

Also Read | ஆதார் அட்டையை மட்டும் காட்டி நிமிடங்களில் எல்.பி.ஜி இணைப்பு பெறலாம்

சிலிண்டரை தூக்குவதில் சிரமம் இருக்காது
14.2 கிலோ எடையுள்ள வீட்டு சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் எடை காரணமாக, அவற்றை கையாள்வதில் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில், எரிவாயு விநியோகம் செய்யும் ஒருவர் கால் தடுமாறி விழுந்தபோது, அவர் மீது சிலிண்டன் விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளை மனதில் வைத்து, சிலிண்டரின் எடையை குறைக்க பல்வேறு வழிகளை அரசு பரிசீலித்து வருகிறது என்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். 

கனரக சிலிண்டர்களால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 'பெண்கள் சிலிண்டர்களின் அதிக எடையை சுமக்க விரும்பவில்லை. சிலிண்டர்களை பெண்கள் கையாள்வதை சுலபமாகுவதற்காக, அதன் எடையை குறைக்க பரிசீலித்து வருகிறோம்' என்று அமைச்சர் தெரிவித்தார்.  

'14.2 கிலோ எடையை 5 கிலோவாக குறைக்கலாமா என்றும் ஆலோசனை செய்கிறோம்.ஆனால் இதுதொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

READ ALSO | LPG சிலிண்டர் மானியம் மீண்டும் கிடைக்கிறதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More