Home> Lifestyle
Advertisement

LIC IPO: முதலீட்டு வாய்ப்பை தவற விடாமல் இருக்க இன்றே பான் எண்ணை அப்டேட் செய்யவும்!

எல்ஐசி ஐபிஓ என்பது எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாகும். இந்த பங்கு விற்பனையில் 10 சதவீதம் அவர்களுக்காக ஒதுக்கப்படுவதோடு தள்ளுபடி சலுகையும் கிடைக்கும்.

LIC IPO: முதலீட்டு வாய்ப்பை தவற விடாமல் இருக்க இன்றே பான் எண்ணை அப்டேட் செய்யவும்!

LIC IPO: சில்லறை முதலீட்டாளர்கள், பாலிஸிதாரர்கள் எல்ஐசியின் ஐபிஓ க்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கான ஆவணங்களும் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.  எல்ஐசியின் ஐபிஓவுக்காகக் காத்திருப்பவர்களின் எதிர்பார்ப்பு விரைவில் முடிவடையும். நாட்டின் மிகப்பெரிய பங்கு விற்பனை மார்ச் 10 ஆம் தேதி திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்களும் இதில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் . இந்த ஐபிஓவில் அதன் பங்கு 10 சதவீதம் எல்ஐசி பாலிசிதாரர்களுக்கு ஒதுக்கப்படும். அதாவது, பாலிசிதாரர்களுக்கு பங்குகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதோடு, அவர்கள் தள்ளுபடியையும் பெறலாம்.

ஐபிஓவில் முதலீடு 

நீங்களும் எல்ஐசி ஐபிஓவில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கான சில ஆவணங்களை முதலில் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். எல்ஐசி ஐபிஓவில் முதலீடு செய்ய, முதலில் உங்கள் எல்ஐசி பாலிசி கணக்குடன் இணைக்கப்பட்ட பான் மற்றும் டிமேட் கணக்கை வைத்திருக்க வேண்டும். அதாவது, இந்த இரண்டு பணிகளையும் நீங்கள் விரைவில் தீர்க்க வேண்டியது அவசியம். அதன் கடைசி தேதி பிப்ரவரி 28 ஆகும்.

மேலும் படிக்க | முதலீட்டாளர்களுக்கு நற்செய்தி, இந்த தேதி வெளிவருகிறது LIC IPO: முக்கிய அம்சங்கள் இதோ

PAN விவரங்களை புதுப்பிக்கும் வழிமுறை 

1. இதற்கு முதலில் எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.

2. இப்போது முகப்புப் பக்கத்தில் 'ஆன்லைன் பான் பதிவு' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

3. இப்போது பதிவு பக்கத்தில் 'Proceed' என்பதைக் கிளிக் செய்யவும்.

4. புதிய பக்கத்தில், PAN, மின்னஞ்சல், மொபைல் எண் மற்றும் பாலிசி எண் ஆகியவற்றை சரியாக நிரப்பவும். இதற்குப் பிறகு, கேப்ட்சா குறியீட்டை சரியாக உள்ளிடவும்.

5. இப்போது OTP கோரிக்கையைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும்.

6. இப்போது OTP ஐ உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
அதன் பிறகு வெற்றிகரமான பதிவு செய்ப்பட்டது குறித்த   தகவல் கிடைக்கும்.

7.  பிறந்த தேதி, பாலிசி-பான் எண் விபரங்களை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்.

பாலிசிதாரர்- ஊழியர்களுக்கு பங்குகள் ஒதுக்கீடு

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, எல்ஐசி பாலிசிதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை ஐபிஓ தெளிவுபடுத்தியுள்ளது. இருவருக்கும் எல்ஐசி பங்கு வெளியீட்டில்,  தள்ளுபடியும் வழங்கப்படும். பாலிசிதாரர்களுக்கு பங்கு விற்பனையில், 10 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர எல்ஐசி ஊழியர்களுக்கு 5 சதவீத பங்கு ஒதுக்கப்படும்.

மேலும் படிக்க | LIC IPO: இதில் முதலீடு செய்ய அனைவரும் காத்திருக்கும் காரணம் என்ன? விவரம் இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More