Home> Lifestyle
Advertisement

LIC IPO: உங்களுக்கு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? எப்படி பார்ப்பது, விலை என்ன? இதோ விவரம்

LIC IPO Issue Price: நிறுவனம் ஐபிஓ வெளியீட்டு விலையை மேல் வரம்பில், அதாவது ரூ 949 ஆக நிர்ணயித்துள்ளது.

LIC IPO: உங்களுக்கு பங்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? எப்படி பார்ப்பது, விலை என்ன? இதோ விவரம்

புதுடெல்லி: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப பொதுப் பங்கு வழங்கல் (ஐபிஓ) வெளியீட்டை சமீபத்தில் முடித்தது. நிறுவனம் ஐபிஓ வெளியீட்டு விலையை (IPO issue price) மேல் வரம்பில், அதாவது ரூ 949 ஆக நிர்ணயித்துள்ளது.

எல்ஐசி ஐபிஓ மே 4-9 இடையே சந்தாவிற்கு திறக்கப்பட்டது. இந்த வெளியீடு வார இறுதி நாட்களிலும் ஏலத்திற்காக திறந்தே இருந்தது. இது முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரு அசாதாரண வழியாக சந்தை நிபுணர்களால் கருதப்பட்டது. 

எல்ஐசியின் ரூ.20,557 கோடி மதிப்பிலான ஐபிஓ ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.902-949 என்ற வரம்பில் விற்கப்பட்டது. இதில் தகுதியான பாலிசிதாரர்கள் தலா ரூ.60 தள்ளுபடியைப் பெற்றனர், அதேசமயம் சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தகுதியான ஊழியர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.45 தள்ளுபடி வழங்கப்பட்டது.

இந்த வெளியீடு முழுக்க முழுக்க இந்திய அரசாங்கத்தின் விற்பனைக்கான சலுகையாகும். அதில் 3.5 சதவீத பங்குகளை மட்டுமே அரசாங்கம் பொது வழங்கலுக்கு அளித்துள்ளது. 

எல்ஐசி ஐபிஓ-வுக்கு எல்ஐசி பாலிசிதாரர்கள், ஊழியர்கள், சில்லறை வியாபாரிகள், பொது முதலீட்டாளர்கள் என அனைவரிடமிருந்தும் வலுவான ஆதரவு கிடைத்தது. 

தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் ஒதுக்கீடுகளுக்காக 2.83 முறை ஏலம் எடுத்தனர், அதேசமயம் நிறுவனமற்ற முதலீட்டாளர்களின் பங்கு 2.91 மடங்கு சந்தா செலுத்தப்பட்டது. சில்லறை ஏலதாரர்களுக்கான ஒதுக்கீடு 1.99 மடங்கு சந்தா செலுத்தப்பட்டது.

சில பாலிசிதாரர்கள் தாக்கல் செய்த மனுக்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கவும், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (எல்ஐசி) ஐபிஓ பங்கு ஒதுக்கீட்டைத் தடை செய்யவும் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த் மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், வணிக முதலீடுகள் மற்றும் ஐபிஓ விஷயங்களில் இடைக்கால நிவாரணம் வழங்க நீதிமன்றம் தயக்கம் காட்ட வேண்டும் என்று கூறியது.

வெளியீட்டிற்கு ஏலம் எடுத்த முதலீட்டாளர்கள், பிஎஸ்இ இணையதளத்தில் ஒதுக்கீடு நிலையைத் தெரிந்துகொள்ளலாம்: 

- முதலில் https://www.bseindia.com/investors/appli_check.aspx என்ற இணைப்பிற்கு செல்லவும். 

- இஷ்யூ வகையின் கீழ், ஈக்விட்டி என்பதைக் கிளிக் செய்யவும்.

- வெளியீட்டுப் பெயரின் (இஷ்யூ நேம்) கீழ், டிராப்பாக்ஸில் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

- விண்ணப்ப எண்ணை எழுதவும்.

- பான் கார்டு ஐடியைச் சேர்க்கவும்.

- 'I am not a Robot' என்பதைக் கிளிக் செய்து சம்பிட் என்பதை அழுத்தவும்

மேலும் படிக்க | அதிர்ச்சியில் LIC IPO முதலீட்டாளர்கள்: ஜிஎம்பி விலை 90% சரிவு

இந்த பங்கு இஷ்யுவின் பதிவாளரான KFin டெக்னாலஜிஸ் ப்ரைவேட் லிமிடட்டின் ஆன்லைன் போர்டலிலும் (https://kcas.kfintech.com/ipostatus) நீங்கள் ஒதுக்கீடு நிலையைப் பார்க்கலாம்.

வெளியீடு முடிந்ததும் வெற்றிகரமான விண்ணப்பதாரர்களுக்கு பங்குகளின் மின்னணுக் கிரெடிட்டைப் புதுப்பித்தல், அனுப்புதல் மற்றும் ரீஃபண்ட் அனுப்புதல் மற்றும் முதலீட்டாளர் தொடர்பான அனைத்து வினவல்களையும் கவனித்தல் ஆகிய பணிகளுக்கு பதிவாளர் பொறுப்பாக இருப்பார்.

- கேஃபின் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் இணையதளத்திற்குச் செல்லவும்.

- தனியாக கொடுக்கப்பட்டுள்ள 'எல்ஐசி ஐபிஓ' டேப்பில் கிளிக் செய்யவும்.

- விண்ணப்ப எண், கிளையண்ட் ஐடி அல்லது பான் ஐடி ஆகிய மூன்று முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- பயன்பாட்டு வகைகளில், ஏஎஸ்பிஏ மற்றும் நான்-ஏஎஸ்பிஏ ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.

- தேர்ந்தெடுத்த பயன்முறையின் விவரங்களை உள்ளிடவும்.

- பாதுகாப்பு நோக்கங்களுக்காக, கேப்ட்சாவை துல்லியமாக நிரப்பவும்.

- சப்மிட் என்பதை அழுத்தவும்

ஐபிஓவில் ஒதுக்கீட்டைப் பெற முடியாத ஏலதாரர்கள் மே 13 ஆம் தேதி பணத்தைத் திரும்பப் பெறுவார்கள். பங்குகள் ஒதுக்கப்படுபவர்கள் மே 16 ஆம் தேதிக்குள் டீமேட் கணக்கில் பங்குகளின் கிரெடிட்டைக் காணலாம். எல்ஐசி ஐபிஓ-வின் லிஸ்டிங் மே 17 முதல் இருக்கக்கூடும். 

எல்ஐசி ஐபிஓ ஒதுக்கீடு உங்களுக்கு கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம்!! இந்த ஐபிஓ-க்களில் எல்ஐசி-க்கு இணையான லாபம் காணலாம் என சந்தை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

- டெல்ஹிவரி ஐபிஓ (Delhivery IPO)
- ப்ருடேண்ட் கார்பரேட் அட்வைசரி சர்விசஸ் ஐபிஓ (Prudent Corporate Advisory Services IPO)
-  வீனஸ் பைப்ஸ் அண்ட் டியூப்ஸ் ஐபிஓ (Venus Pipes and Tubes IPO) 
- உத்ராக்‌ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் ஐபிஓ (Utkarsh Small Finance Bank IPO_
- ஐக்ஸீகோ ஐபிஓ (Ixigo IPO)

மேலும் படிக்க | ரிலையன்ஸ் பவர் சாதனையை முறியடித்த LIC IPO; பாலிசிதாரர்கள் அமோக வரவேற்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More