Home> Lifestyle
Advertisement

ஒருபுறம் COVID, மறுபுறம் காற்று மாசுபாடு: இரண்டையும் சமாளிக்க எந்த mask அணிய வேண்டும் தெரியுமா…

சுவாச வால்வைக் கொண்டிருக்கும் N95 முகக்கவாசங்களை, அதிக பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் கொண்ட ஆபத்தான சூழலில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்கள் பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருபுறம் COVID, மறுபுறம் காற்று மாசுபாடு: இரண்டையும் சமாளிக்க எந்த mask அணிய வேண்டும் தெரியுமா…

COVID-19-ஆல் உலகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இப்போது காற்று மாசுபாடு (Air Pollution) இதனோடு சேர்ந்துள்ளதால் பிரச்சனை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

'கெமிக்கல் அண்ட் இன்ஜினியரிங் நியூஸ்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் காற்று மாசுபாட்டை முதுமை, மன இறுக்கம் மற்றும் ஒரு சில நரம்பியல் கோளாறுகளுடன் தொடர்பு படுத்தியுள்ளனர். வெளிப்புற காற்று மாசுபாடு இன்று நம் வாழ்வில் ஒரு மறுக்க முடியாத உண்மையாகிவிட்டது.

இருப்பினும், குழந்தைகள் மற்றும் பெரியவர்களில், காற்று மாசுபாட்டின் குறுகிய மற்றும் நீண்ட கால வெளிப்பாடு நுரையீரல் செயல்பாடு குறைதல், சுவாச தொற்று மற்றும் மோசமான ஆஸ்துமாவுக்கு வழிவகுக்கும். கர்ப்பிணிப் பெண்கள் (Pregnant Women)காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுகையில், அது குழந்தையின் குறைந்த பிறப்பு எடை, முன்கூட்டிய பிறப்பு மற்றும் சிறிய கர்ப்பகால பிரச்சனைகள் போன்ற கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடும்.

மோசமான காற்றின் தரம் காரணமாக COVID-19 இறப்புகளில் 11% உயர்வு ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, COVID-19 வைரஸ் மற்றும் காற்று மாசுபாடு இரண்டையும் சமாளிக்க, ஒருவர் இரண்டுக்கும் ஏற்ற முகக்கவசத்தை அணிய வேண்டும்.

ALSO READ: கொய்யா இலைகளால் நன்மைகள் கோடி! பொய்யா வாக்கு இது!!

பொருத்தமான முகக்கவசங்கள் யாவை?

சுவாச வால்வைக் கொண்டிருக்கும் N95 முகக்கவாசங்களை, அதிக பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் கொண்ட ஆபத்தான சூழலில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்கள் பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், சாதாரண பயன்பாட்டிற்கு மக்கள் ஒரு நல்ல தரம் கொண்ட சர்ஜிக்கல் அல்லது துணி முகக்கவசத்தை பயன்படுத்தலாம். இது மாசுபாடு மற்றும் COVID எனஇரண்டிலிருந்தும் நம்மை காக்க உதவும்.

உங்கள் வாய் மற்றும் மூக்கை சரியாக மூடி, தளர்வாக இல்லாத முகக்கவசங்களைப் (Face Mask) பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் FFP1 முகக்கவசங்களை அணிந்தால் அவை காற்று மாசுபாட்டிலிருந்து உங்களைக் காப்பாற்றும் என்பதால் அவை சிறந்ததாக இருக்கும்.

எந்த முகக்கவசங்கள் பொருத்தமானவை அல்ல?

நீண்ட நேரம் பயன்படுத்த N95 முகக்கவசங்கள் நல்ல தேர்வாக இருக்காது. நீங்கள் அவற்றை சரியாக அணியவில்லை என்றால் அவை வசதியாகவும் இருக்காது எந்த பயனையும் அளிக்காது. மேலும், இந்த நாட்களில் உங்கள் ஆடைக்கு ஏற்றவாறு பல்வேறு வகையான முகக்கவசங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இருப்பினும், எம்பிராய்டரி மற்றும் சீக்வின்களைக் கொண்டிருக்கும் முகக்கவசங்கைளில் கவனம் தேவை. ஏனெனில் அவற்றில் பல துளைகள் இருகக்கக்கூடும். துளைகள் பாதுகாப்பற்றதாக இருக்கலாம்.

மறுபுறம், மக்கள் வால்வுகள் கொண்ட முகக்கவசங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உங்களை காற்று மாசுபாட்டிலிருந்து காப்பாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவற்றால் COVID-19 வைரஸிலிருந்து உங்களை காப்பாற்ற முடியாது.

இந்த விஷயங்களில் கவனம் தேவை:

-நீங்கள் அணியும் முகக்கவசங்கள் எப்போதும் ஈரமாக இருக்கக்கூடாது. இதனால் எதிர்மறையான விளைவுகள் ஏற்படலாம்.

-முகக்கவசங்கள் அழகாக இருப்பதை விட பயனுள்ளதாக இருப்பது அவசியம். ஆகையால் இதில் அழகுக்கு தேவையில்லாத முக்கியத்துவத்தை அளிக்க வேண்டாம்.

-ஒருவர் அணிந்த முகக்கவசத்தை மற்றொருவர் கண்டிப்பாக அணியக்கூடாது.

-முகக்கவசங்கள் முறையாக, சரியான வழியில் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.

-பல முறை பயன்படுத்தக்கூடிய மாஸ்குகளை நீங்கள் பயன்படுத்தினால், அதை கண்டிப்பாக முறையாக தூய்மை படுத்திய பின்னரே அடுத்த முறை பயன்படுத்த வேண்டும்.

ALSO READ: குழந்தை அறிவாளியாக பிறக்க கர்ப்பிணி பெண்கள் என்ன செய்யணும் தெரியுமா?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More