Home> Lifestyle
Advertisement

தமிழ் தெரிந்தவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

திருவள்ளூர் கலெக்டர் ஆபிசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.  

தமிழ் தெரிந்தவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் பகுதி நேர வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.  காலியாக உள்ள இப்பணிக்கு ஆண் மற்றும் பெண் என இருதரப்பினரும் விண்ணப்பிக்கலாம், தகுதியானவர்கள் இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மேலும் படிக்க | பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை... விண்ணப்பிக்க 16ஆம் தேதி கடைசி நாள்

1) பணியிடம்:

திருவள்ளூர் 

2) நிறுவனத்தின் பெயர்:

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம்

3) பணியின் பெயர்:

 பகுதிநேர தூய்மை பணியாளர் 

4) மொத்த காலி பணியிடங்கள்:

ஆண்களுக்கு -10 மற்றும் பெண்களுக்கு -08 என மொத்தமாக 18 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

5) தகுதி:

கலெக்டர் ஆபிசில் காலியாக உள்ள இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தமிழில் நன்கு எழுத மற்றும் படிக்க தெரிந்திருந்தால் மட்டும் போதுமானது.

6) வயது வரம்பு:

குறைந்தபட்சமாக 01/07/2022 தேதியின்படி 18 வயது முழுமையாக நிரம்பியவர்கள் மற்றும் 30 வயதிற்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறார்கள்.  மேலும்  எஸ்சி / எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயதில் 5 ஆண்டுகள் தளர்வும், பிசி, பிசிஎம் மற்றும் டிஎன்சி விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆண்டுகள் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

7) சம்பளம்:

தேர்ந்தெடுக்கப்படும் பகுதிநேர பணியாளர்களுக்கு ரூ.3000 சம்பளமாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

8) தேர்வு முறை:

பணிக்கு விண்ணப்பித்த ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

9) விண்ணப்பிக்கும் முறை:

ஆஃப்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை கொண்டு சேர்க்க வேண்டும்.

10) விண்ணப்பிக்க கடைசி தேதி:

30.05.2022

மேலும் படிக்க | பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More