Home> Lifestyle
Advertisement

IRCTC: ரூ.15 ஆயிரத்தில் தென்னிந்திய கோயில்களுக்கான சுற்றுப்பயணம்..!!

தென்னிந்தியாவின் பிரசித்தி பெற்ற கோவில்களை பார்க்க விரும்புபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி. IRCTC டூரிசம் தென்னிந்திய டூர் பேக்கேஜை இயக்குகிறது. இந்த டூர் பேக்கேஜ் பெறுவதற்கு ரூ.15 ஆயிரத்தில் முன்பதிவு செய்யலாம்.

IRCTC: ரூ.15 ஆயிரத்தில் தென்னிந்திய கோயில்களுக்கான சுற்றுப்பயணம்..!!

IRCTC சுற்றுலாத்துறை மற்றொரு பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலை அறிவித்துள்ளது. திவ்ய தட்சிணா யாத்திரை தெலுங்கு மாநிலங்களில் இருந்து இயக்கப்படும். இந்த டூர் பேக்கேஜ் அருணாச்சலம், ராமேஸ்வரம், மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்கானது. இது 8 இரவுகள், 9 நாட்கள் சுற்றுப்பயணம். மே 25ஆம் தேதி ஹைதராபாத்தில் இருந்து இந்தப் பயணம் தொடங்குகிறது.

தெலுங்கு மாநிலங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இந்த பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலில் ஏறலாம். இந்த டூர் பேக்கேஜ் பற்றிய கூடுதல் விவரங்களை அறியலாம். IRCTC சுற்றுலா திவ்ய தக்ஷிணா யாத்திரையின் முதல் நாள் செகந்திராபாத்தில் இருந்து தொடங்குகிறது. முதல் நாள் காசிப்பேட்டை, வாரங்கல், கம்மம், விஜயவாடா, தெனாலி, ஓங்கோல் ஆகிய இடங்களிலும், இரண்டாம் நாள் நெல்லூர், கூடூர், ரேணிகுண்டா ஆகிய இடங்களிலும் இந்த சுற்றுலா ரயிலில் ஏறலாம்.

இரண்டாம் நாள் திருவண்ணாமலை சென்றடையும். அருணாசலம் கோயிலுக்குச் செல்லலாம். மூன்றாம் நாள் ராமேஸ்வரம் சென்றடையும். உள்ளூர் கோயில்களைக் காணலாம். இரவு ராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.

நான்காம் நாள் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு புறப்பட வேண்டும். மாலையில் உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்லலாம். அதன் பிறகு கன்னியாகுமரி கிளம்ப வேண்டும். ஐந்தாம் நாள், ராக் மெமோரியல், காந்தி மண்டபம் மற்றும் சன்செட் பாயிண்ட் ஆகியவற்றைக் காணலாம். இரவு கன்னியாகுமரியில் தங்க வேண்டும்.

ஆறாம் நாள் திருவனந்தபுரம் புறப்பட்டு, ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில், கோவளம் கடற்கரையைக் காணலாம். அதன்பின் திருச்சிராப்பள்ளிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஏழாம் நாள் ஸ்ரீரங்கம் கோயிலையும் பிரகதீஸ்வர கோயிலையும் பார்க்கலாம். அதன் பிறகு மறுமார்க்க பயணம் தொடங்குகிறது.

மேலும் படிக்க | ஐரோப்பாவிற்கு படை எடுக்கும் இந்தியர்கள்... ஷெங்கன் விசா துறை வெளியிட்ட தகவல்!

எட்டாவது நாள் ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, கம்மம், வாரங்கல், காசிப்பேட்டை வழியாக ஒன்பதாம் நாள் செகந்திராபாத் ஆகிய நகரங்களைச் சென்றடைவதோடு சுற்றுப்பயணம் முடிவடைகிறது. ஐஆர்சிடிசி டூரிஸம் திவ்ய தக்ஷிணா யாத்ரா டூர் பேக்கேஜ் கட்டணங்களை பொறுத்தவரை, எகனாமி கிளாஸ் ரூ.14,250, ஸ்டாண்டர்ட் கிளாஸ் ரூ.21,900 மற்றும் கம்ஃபோர்ட் கிளாஸ் ரூ.28,450 செலுத்த வேண்டும்.

டூர் பேக்கேஜில் ஸ்லீப்பர் கிளாஸ் பயணம், எகானமி கிளாஸ், ஏசி அல்லாத அறைகளில் தங்கும் வசதி, மூன்றாம் ஏசி ஸ்டாண்டர்ட் கிளாஸ், இரண்டாவது ஏசி டிரான்டர்டு கிளாஸ், ஏசி அறைகளில் தங்கும் வசதி மற்றும் உள்ளூரில் சுற்றி பார்த்தல் ஆகியவை அடங்கும். இந்த டூர் பேக்கேஜ் பற்றிய முழுமையான விவரங்களை  https://www.irctctourism.com/ என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் படிக்க | தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல திட்டமா? விசா தொடர்பான விதிகளில் மாற்றங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More