Home> Lifestyle
Advertisement

SRH ஓனர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை ஆயிரம் கோடிகளா?

Kavya Maran Net Worth: நடந்து முடிந்த ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் ன்ரைசர்ஸ் ஹைதராபாத் தோல்விடைந்தது.   

SRH ஓனர் காவ்யா மாறனின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை ஆயிரம் கோடிகளா?

Kavya Maran Net Worth: ஐபிஎல் 2024ன் 17வது சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. மே 26ம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதி போட்டியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அணியை தோற்கடித்து 3வது முறையாக கோப்பையை வென்றது. ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்த SRH அணியின் CEO காவ்யா மாறன் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இந்த ஆண்டு தனது அணி கோப்பையை வெல்லும் என்று உறுதியுடன் இருந்த அவரால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மேலும் படிக்க |கம்பீர் லக்னோ அணியை கைவிட்டது எப்படி? ஷாருக்கான் வீட்டில் நடந்த ரகசிய மீட்டிங்..!

சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதி போட்டியில் மோசமான தோல்வி அடைந்ததால் மிகவும் ஏமாற்றமடைந்தார். ஆனாலும், தனது அணி வீரர்களை போட்டிக்கு பிறகு உற்சாகப்படுத்தினார். இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் தலைவர் காவ்யா மாறன் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அவரது தந்தை மற்றும் சன் குழுமத்தின் சொந்தக்காரர் கலாநிதி மாறன் கிட்டத்தட்ட 26,000 கோடிகளுக்கு சொந்தக்காரர். காவ்யா மாறன் மைதானத்திற்கு வந்தாலே பலரும் குஷி ஆகி விடுவர். காரணம் ஒவ்வொரு பந்திற்கும் அவர் கொடுக்கும் ரியாக்சன்கள் மீம் டெம்ப்லேட்டாக மாறிவிடும்.

fallbacks

தன் அணி வெற்றி பெற்றால் சந்தோஷத்தில் துள்ளி குதிப்பதும், தோல்வி அடையும் பட்சத்தில் சோகமாக செல்வது என ஐபிஎல் கேமராக்களும் அவரை சுற்றியே இருக்கும். காவ்யா மாறன் சன் குழுமத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனின் ஒரே மகள் ஆவார். மேலும் இந்தியாவில் உள்ள பணக்கார பெண்மணிகளில் அவரும் ஒருவர். காவ்யா மாறனின் சொத்து மதிப்பு மட்டுமே 400 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது. சென்னையில் உள்ள ஸ்டெல்லா மோரிஸ் கல்லூரியில் பி.காம் படித்த அவர், பிறகு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ளார். ஐபிஎல் அணியை தவிர சன் குழுமத்தின் OTT தளமான Sun NXTன் தலைவராகவும் உள்ளார். 

கிரிக்கெட் தவிர கார்கள் மீதும் காவ்யாவிற்கு அதிக விருப்பம் உள்ளது. பல ஆடம்பர கார்களை தனது கேரேஜில் வைத்துள்ளார். ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, BMW போன்ற விலையுயர்ந்த கார்கள் அவரிடம் உள்ளன. மேலும் காவ்யா மாறன் அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தாத்தா முரசொலி மாறன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். அவரது சித்தப்பா முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர், தற்போது எம்பியாக உள்ளார்.

மேலும் படிக்க | இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் தான்...!? வெளியான பரபரப்பு தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More