Home> Lifestyle
Advertisement

மூத்த குடிமக்களுக்கு அருமையான ஜாக்பாட் திட்டம்.. இப்பவே இந்த வங்கிகளில் முதலீடு செய்யுங்கள்

Banks One Year Fixed Deposit Scheme: நாட்டின் சில சிறப்பு அரசு வங்கிகளின் எஃப்டிகளைப் பற்றி இன்று நாம் காணப் போகிறோம், இதில் நீங்கள் ஒரு வருடத்தில் பம்பர் ரிட்டர்ன்களைப் பெறுவீர்கள்.

மூத்த குடிமக்களுக்கு அருமையான ஜாக்பாட் திட்டம்.. இப்பவே இந்த வங்கிகளில் முதலீடு செய்யுங்கள்

ஃபிக்சட் டெபாசிட்டிற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்: நீங்களும் அடுத்த தீபாவளி (Diwali Festival 2024) வரை நல்ல வருமானத்தைப் பெற விரும்பினால் அல்லது பணத்தைச் சேமிக்க விரும்பினால், இது உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். நாட்டின் சில சிறப்பு அரசு வங்கிகளின் FDகளைப் (Bank Fixed Deposit) பற்றி இன்று நாம் இந்த காட்டுரையில் காணப் போகிறோம், இதில் நீங்கள் ஒரு வருடத்தில் பம்பர் வருமானத்தைப் பெறுவீர்கள். அதுமட்டுமின்றி அடுத்த தீபாவளிக்குள் உங்கள் பணத்தில் நல்ல தொகையை நீங்கள் சேமிக்கலாம்.

முதலீட்டைத் தொடங்க தீபாவளி பண்டிகை மிகவும் நல்ல நாளாகக் கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பணத்தை சேமிக்க நீங்கள் நினைத்தால், FD (நிலையான வைப்பு) ஒரு நல்ல வழி ஆகும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சில அரசு வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கான நிரந்தர வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. எனவே அந்த வங்கிகள் எவை என்றும் அவை எவ்வளவு வடியை தருகிறது என்பதை பார்ப்போம்.

இந்நிலையில் ஸ்டேட் வங்கி (State Bank Of India - SBI) மற்றும் பஞ்சாப் நேசனல் வங்கி (Punjab National Bank - PNB) மற்றும் பாங்க் ஆஃப் பரோடா (Bank Of Baroda - BOB) மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட நிலையான வைப்புக்கு (Fixed Deposits) என்ன வட்டி விகிதத்தில் கொடுக்கப்படுகிறது என்பதை நாம் பார்ப்போம்.

மேலும் படிக்க | ஜாக்கிரதை! கார் வாங்கும் முன் இந்த 5 விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்!

பஞ்சாப் நேஷனல் வங்கி ஃபிக்சட் டெபாசிட் (Punjab National Bank FD):
பஞ்சாப் நேஷனல் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 1 வருட ஃபிக்சட் டெபாசிட் வசதியை வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி பொது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட நிலையான வைப்புகளுக்கு 6.75 சதவீத வட்டியை வழங்குகிறது. இது தவிர மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி சமீபத்தில் நவம்பர் 1 ஆம் தேதி வட்டி விகிதங்களை உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத ஸ்டேட் வங்கி ஃபிக்சட் டெபாசிட் (State Bank of India FD):
நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியைப் பற்றி பேசுகையில், பாரத ஸ்டேட் வங்கி (SBI)  அதன் வாடிக்கையாளர்களுக்கு மூன்று சதவீதம் முதல் 7.10 சதவீதம் வரை வட்டி சலுகைகளை வழங்குகிறது. ரூ.2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புத்தொகைக்கான விகிதங்கள் இவை. இது தவிர, எஸ்பிஐயில் பாரத ஸ்டேட் வங்கி) ஓராண்டுக்கு நிரந்தர வைப்புத் தொகை செய்தால், 5.75 சதவீத வட்டி கிடைக்கும். இது தவிர மூத்த குடிமக்களுக்கு 6.25 சதவீத வட்டி வழங்கப்படும்.

பாங்க் ஆஃப் பரோடா ஃபிக்சட் டெபாசிட் (Bank of Baroda FD):
நீங்கள் பாங்க் ஆஃப் பரோடாவில் ஃபிக்சட் டெபாசிட் செய்தால், இப்போது வங்கியிலிருந்து அதிக வட்டி பெறுகிறீர்கள். பண்டிகைக் காலத்தில் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 2 கோடிக்கும் குறைவான ஃபிக்செட் டெபாசிட்டிற்கு (FD Interest Rate), பொது வாடிக்கையாளர்கள் 1 வருட FDக்கு 6.75 சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. இது தவிர மூத்த குடிமக்களுக்கு 7.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | முந்துங்கள் மக்களே... நாளையுடன் முடிகிறது தள்ளுபடி - அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை அள்ளுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More