Home> Lifestyle
Advertisement

கேரளாவில் துவங்கியது "சர்வதேச திரைப்பட விழா"!

இந்த திரைப்பட விழாவில் 65 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் 190 படங்கள் இடம்பெற உள்ளன!

கேரளாவில் துவங்கியது

திருவனந்தபுரம்: திரைப்பட காதலர்களின் வருடாந்திர யாத்திரை இன்று வெள்ளிக்கிழமை கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவாக (IFFK) தொடங்குகிறது. 

இந்த திரைப்பட விழாவில் 65 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் 190 படங்கள் இடம்பெற உள்ளன. இந்த விழாவானது கோலகலமாக கொண்டாடப்படவுள்ளதாக நிகழ்ச்சியின் இயக்குனர் கமல் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தின் தலைநகரில் இன்னமும் ஒகி பேரழிவின் தாக்கம் தீராத நிலையில் இந்த 22-வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளதால், ஒகி தாண்டவத்தை நினைவுகூறி நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது.

நடிகர்கள் மாதாபி பானர்ஜி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். தாகூர், கல்பாவன், கைராலி, ஸ்ரீ மற்றும் நிளா ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை திரைப்படங்களை திரையிட  உள்ளனர்.

காலை 10 மணியளவில் தாகூர் தியேட்டரில் கிங் ஆப் பீக்கிங் திரையிடப்படுகிறது. காலை 10.15 மணியளவில், கல்பாவனில் "வுட்பிக்கர்" திரையிடப்படுகிறது, அதே நேரத்தில் ஸ்ரீ "டாக்ஸ் அண்ட் ஃபூல்ஸ்" படத்தினை திரையிடுகிறார். மற்றும் காலை 10.30 மணியளவில் நிலா "பிலஸ்ட்" திரைப்படத்தினை திரையிடுகிறார்.

ரஷ்ய திரைப்பட இயக்குனர் அலெக்ஸாண்டர் சோகோவ் அவர்களை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு, 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கவுள்ளது. 

இந்த விழாவில் முதல் முறையாக ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. 

இந்த விழாவில் 14 திரையரங்குகளில் 445 திரையிடல்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திரையிடல்களுக்கான் அனுமதி சீட்டினை IFFK அதிகாரபூர்வ இணையத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்!

Read More