Home> Lifestyle
Advertisement

ரயில் பயணிகளுக்கு பயனுள்ள புதிய 2 மொபைல் App அறிமுகம்!!

ரயில் பயணிகளுக்கு பயனுள்ள வகையில் இந்தியன் ரயில்வே துறை Menu on Rails, Rail MADAD என்ற புதிய இரண்டு மொபைல் செயலியை அறிமுகபடுத்தியுள்ளது! 

ரயில் பயணிகளுக்கு பயனுள்ள புதிய 2 மொபைல் App அறிமுகம்!!

ரயில் பயணிகளுக்கு பயனுள்ள வகையில் இந்தியன் ரயில்வே துறை Menu on Rails, Rail MADAD என்ற புதிய இரண்டு மொபைல் செயலியை அறிமுகபடுத்தியுள்ளது! 

ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் 'ரயில் மேடட்' மற்றும் 'மெனு ஆன் ரெயில்ஸ்' என்ற இரண்டு புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார். இந்த செயலி மூலம் இரயில் பயணத்தின் போது பயணிகள் சந்திக்கும் இன்னல்கள் தொடர்பாக புகார்களை தெரிவிக்க இந்திய ரயில்வே துறை இந்த முறையை அறிமுகம் செய்துள்ளது. ரயில் பயணிகள் பயண அனுபவத்தை சுலபமாக்குவதற்கான முயற்சியில் திங்களன்று ரயில்வே அமைச்சகம் இந்த இரண்டு மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது.

Rail Madad செயலி மூலம் இரயில் பயணத்தின் போது பயணிகள் சந்திக்கும் இன்னல்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். Menu on Rails செயலி மூலம் ரயிலில் கிடைக்கும் உணவு பொருட்கள் மற்றும் குளிர்பானம் போன்றவற்றின் விலையை சரிபார்க்கவும் இது பயன்படுகிறது.   

Rail MADAD செயலி:- 

> இந்த செயலியில் நமது தகவல்களை பதிவு செய்தவேண்டும். பின்னர் பயனர்களுக்கு என்றே ஒரு தனி ID வழங்கபடுகிறது. 

> இந்த செயலிமூலம் நாம் உடனடியாக புகார்களை எந்த தடங்களும் இன்றி தெரிவிக்கலாம். இந்த புகாரானது நேரடியாகவே அதிகாரிகளுக்கு அனுப்பப்படும் அவகையில் அமைத்துள்ளனர். 

> பயணி தெரிவித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கபட்டவுடன், புகார் கொடுத்தவரின் மொபைல்-க்கு ஒரு எஸ்.எம்.எஸ்-ஆகா அனுப்பப்படும். 

> அதுமட்டும் இன்று பயணிகளுக்கு அவசர உதவிக்கு தேவையான உதவிமையங்களின் தொலைபேசி எண்களும் இந்த செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது.

Menu on Rails செயலி:- 

> இந்த செயலி பல்வேறு ரயில்களில் உள்ள உணவு பட்டியல்களை காட்டுகிறது. குறிப்பாக, நான்கு வகையான காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு,குளிபானம் மற்றும் ஏ-லா-கார்டே வகைகளையும் இதன் மூலம் எளிமையாக தெரிந்து கொள்ளலாம். 

> ரயில் செல்லும் ஒவ்வொரு ரயில் நிலையங்களில் உள்ள உணவு பொருட்களின் விளையயுன் இந்த செயலி மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.  

> காலை உணவு, லைட் மீல்ஸ், காம்போ மீல்ஸ் அல்லாத வேகன், ஜெயின் உணவு, இனிப்புகள், நீர் உணவுகள் ஆகியவற்றின் A-La-Carte மெனுவில் உள்ள சுமார் 96 உணவுபொருடகளின் பட்டியலை கொடுக்கிறது.

> ராஜ்தானி, சதாப்தி மற்றும் துரந்தோ ரயில்களில் வழங்கப்படும் உணவு பயன்பாட்டிலும் இந்த செயலியின் மூலம் தெரிந்துகொள்ளலாம். 

> இந்த செயலிகளை Android மற்றும் iOS தளங்களின் மூலம் பதிவிறக்க செய்து கொள்ளலாம்.  

 

Read More