Home> Lifestyle
Advertisement

டிரைவிங் லைசென்சில் புதிய மாற்றம்! முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை!

டிரைவிங் லைசென்ஸ் புதிய விதிகள் 2022 இன் கீழ் இனி ஓட்டுநர் சோதனை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

டிரைவிங் லைசென்சில் புதிய மாற்றம்! முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை!

பொதுவாக இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு டிரைவிங் லைசென்ஸ் தேவை,  அதனை பெற இனி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்குச் செல்லவோ அல்லது டிரைவிங் லைசென்ஸ் பெற நீண்ட வரிசையில் காத்திருக்கவோ தேவையில்லை.  தற்போது இந்த செயல்முறை மிகவும் எளிமையான ஒன்றாக மாறிவிட்டது, டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.  டிரைவிங் லைசென்ஸ் புதிய விதிகள் 2022 இன் கீழ் இனி ஓட்டுநர் சோதனை தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  'யூனியன் மினிஸ்டரி ஆப் ரோட்ஸ் அண்ட் மோட்டார்வேஸ்'  டிரைவிங் லைசென்ஸ் பெறுவதில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. 

fallbacks

மேலும் படிக்க | பயிற்சி இல்லாமலே போட்டித்தேர்வில் வெற்றி பெற எளிய வழிகள்!

டிரைவிங் லைசென்ஸ் புதிய விதிகள் இந்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.  சாலைகள் மற்றும் போக்குவரத்து துறை விதிமுறைகளின்படி, மாநில அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் டிரைவிங் லைசென்ஸ்க்கு விண்ணப்பிக்கும் போது ஆர்டிஓவிடம் வாகனத்தை ஒட்டி காமிக்க தேவையில்லை, பயிற்சி மையங்களில் இருந்தே சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.  ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும், ஓட்டுநர் பயிற்சி மையங்கள் அதன் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  ஓட்டுநர் பயிற்சி மையங்கள் எந்த தரத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்தும் அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

1) இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன பயிற்சி மையங்களுக்கு, குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். கனரக வாகனப் பயிற்சிக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.

2) ஒரு ஸ்டிமுலேட்டர் மற்றும் ஒரு டெஸ்ட் டிராக் இருக்க வேண்டும்.

3) பயிற்சியாளர் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் மற்றும் குறைந்தது ஐந்து வருட ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4) பயிற்சி மையத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பயோமெட்ரிக் அமைப்பு இருக்க வேண்டும்.

5) போக்குவரத்து பாடத்திட்டத்தின்படி உயர்தரத்தில் டெஸ்ட் டிராக்குகளை  சோதனை செய்ய வேண்டும்.

6) இலகுரக வாகனப் பயிற்சி 29 மணிநேரம் மற்றும் நான்கு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். இது தியரி மற்றும் பிராக்டிஸ் என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும், தியரிக்கு 8 மணிநேரமும், பிராக்டிஸ் செய்வதற்கு 21 மணிநேரமும் ஆகும்.

7) நடுத்தர மற்றும் கனரக மோட்டார் வாகனங்களுக்கான பயிற்சி கால அளவு 38 மணிநேரம் மற்றும் 6 வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.  தியரி வகுப்புகள் 8 மணிநேரமும், பிராக்டிகல் வகுப்புகள் 31 மணிநேரமும் நடைபெற வேண்டும்.

fallbacks

டிரைவிங் லைசென்ஸ் பெற தேவையான ஆவணங்கள் :

1) வயதுச் சான்று - கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், பான் கார்டு அல்லது பணியமர்த்துபவர் சான்றிதழ் கொடுக்கலாம்.

2) முகவரி சான்று - ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாடகை ஒப்பந்தம், பயன்பாட்டு பில் அல்லது ஆயுள் காப்பீட்டு பாலிசி சான்றிதழ் கொடுக்கலாம்.

3) ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

4) 4 விண்ணப்பப் படிவம்

புதிய விதிகளின் படி டிரைவிங் லைசென்ஸ்க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இணையதளத்தைப் பார்வையிடவும்.  நீங்கள் வசிக்கும் மாநிலத்தையும், நீங்கள் பெற விரும்பும் டிரைவிங் லைசென்ஸ் வகையையும் தேர்வு செய்ய வேண்டும்.  அந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.  உங்கள் பேமெண்ட்டை சரிபார்த்து, பின்னர் "சப்மிட் " என்பதைக் கிளிக் செய்யவும்.  பின்னர் டிரைவிங் லைசென்ஸ் தபால் மூலம் உங்கள் வீட்டிற்கு வந்து சேரும்.  இதுவே ஆஃப்லைனில் விண்ணப்பிக்க, நீங்கள் அருகிலுள்ள ஆர்டிஓ RTO அலுவலகத்திற்குச் சென்று படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்கள் மற்றும் லைசென்ஸுக்கான கட்டணங்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும், பின்னர் சில தினங்களுக்குள் உங்களுக்கு டிரைவிங் லைசென்ஸ் வந்து சேரும்.

மேலும் படிக்க | செய்யும் தொழிலே தெய்வம்: அதுக்குன்னு இப்படி கின்னஸ் ரெகார்ட் செய்யலாமா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More