Home> Lifestyle
Advertisement

தனியார் ஊழியர்கள் கவனத்திற்கு... EPFO மூலம் ரூ. 7 லட்சம் வரை காப்பீடு - முழு விவரம்!

EPFO - EDLI Insurance Scheme: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மூலம், தனியார் ஊழியர்கள் அதிகபட்சமாக ரூ. 7 லட்சம் வரை காப்பீடு பெறுகிறார்கள். அதுகுறித்த முழு விவரத்தையும் இங்கு காணலாம். 

தனியார் ஊழியர்கள் கவனத்திற்கு... EPFO மூலம் ரூ. 7 லட்சம் வரை காப்பீடு - முழு விவரம்!

EPFO - EDLI Insurance: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஆயுள் காப்பீட்டு வசதியை வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த வசதியின் கீழ், ஒவ்வொரு EPFO உறுப்பினரும் அதிகபட்சமாக ரூ. 7 லட்சம் வரை காப்பீடு பெறுகிறார்கள். 

EPFO-இன் இந்த காப்பீட்டுத் திட்டம், பணியாளர்கள் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு (EDLI) என அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நீங்களும் EPFO-இல் உறுப்பினராக இருந்தால், இந்தத் திட்டத்தைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையில் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்றும் அதில் பெறப்படும் தொகை (Claim Amount) எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை இதில் காணலாம்.

உயிரிழந்தால் குடும்பத்திற்கு நிதி...

ஊழியர்களின் குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்காக EPFO-வால் இத்திட்டம் நடத்தப்படுகிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் EPFO உறுப்பினர் இறந்து விட்டால், அவருடைய வாரிசு அல்லது நாமினி இந்த காப்பீட்டுத் தொகையை கோரலாம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் எந்த ஒரு ஊழியருக்கும் இந்தக் காப்பீடு முற்றிலும் இலவசம் என்பதுதான் இதன் சிறப்பு. இந்த திட்டத்திற்கான பங்களிப்பு நிறுவனத்தால் செய்யப்படுகிறது, இது ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 0.50 சதவீதமாகும்.

மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் இருந்து கடன் வாங்கலாம்! எப்படி தெரியுமா?

உரிமைகோரல் தொகை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

EPF சந்தாதாரர் அகால மரணமடைந்தால், அவருடைய நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசு காப்பீட்டுத் தொகையை கோரலாம். இதற்கு, நாமினியின் வயது குறைந்தது 18 ஆக இருக்க வேண்டும். இதை விட குறைவாக இருந்தால், பாதுகாவலர் அவர் சார்பாக உரிமை கோரலாம். உரிமைகோரும் போது உயிரிழந்த EPF சந்தாதாரரின் இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் அவசியம் சமர்பிக்கப்பட வேண்டும். மைனரின் பாதுகாவலர் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டால், பாதுகாவலர் சான்றிதழ் மற்றும் வங்கி விவரங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

EDLI தொடர்பான விதிகள்

- வேலை செய்யும் போது ஊழியர் நோய்வாய்ப்பட்டாலோ, விபத்து ஏற்பட்டாலோ அல்லது இயற்கையான மரணம் ஏற்பட்டாலோ EDLI-வில் உரிமை கோரலாம்.

- EPFO உறுப்பினர் அவர் பணிபுரியும் வரை மட்டுமே EDLI திட்டத்தின் கீழ் உள்ளார். வேலையை விட்டு வெளியேறிய பிறகு, அவரது குடும்பத்தினர் / வாரிசுகள் / பரிந்துரைக்கப்பட்டவர்கள் அதில் உரிமைக்கோர முடியாது.

- EPFO உறுப்பினர் 12 மாதங்கள் தொடர்ந்து பணியாற்றியிருந்தால், ஊழியர் இறந்த பிறகு, பரிந்துரைக்கப்பட்டவருக்கு குறைந்தபட்சம் 2.5 லட்சம் பலன் கிடைக்கும்.

- EDLI திட்டத்தின் கீழ் நாமினி இல்லை என்றால், காப்பீட்டின் கவரேஜ் இறந்த பணியாளரின் மனைவி, திருமணமாகாத மகள்கள் மற்றும் மைனர் மகன் / மகன்கள் பயனாளிகளாக கருதப்படுவார்கள்.

- PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்க, வேலை வழங்குபவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட படிவத்துடன் காப்பீட்டுத் திட்டத்தின் 5IF படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். இது அவரால் சரிபார்க்கப்பட்டு அடுத்தகட்டத்திற்கு செல்லும். 

மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பழைய ஓய்வூதியத்திற்கு மாற்றி கொள்ளலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More