Home> Lifestyle
Advertisement

இந்த RD திட்டத்தில் மாதம் 10 ஆயிரம் செலுத்தினால் - கையில் ரூ. 7.10 லட்சம் கிடைக்கும்!

Post Office RD Interest Rate: சில சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ள நிலையில், தபால் அலுவலகத்தின் தொடர் வைப்பு திட்டத்தின் வட்டி விகிதமும் உயர்ந்துள்ளது.

இந்த RD திட்டத்தில் மாதம் 10 ஆயிரம் செலுத்தினால் - கையில் ரூ. 7.10 லட்சம் கிடைக்கும்!

Post Office RD Interest Rate: ஜூலை-செப்டம்பர் காலாண்டுக்கான சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் நேற்றிரவு (ஜூன் 30) அறிவித்துள்ளது. இந்த மாற்றத்தின் கீழ், 5 ஆண்டுகளுக்கான தொடர் வைப்புத்தொகை மிகவும் லாபம் தரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. அரசாங்கம் அதன் வட்டி விகிதங்களை 30 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது. 

இப்போது 6.2 சதவீதத்துக்குப் பதிலாக தபால் நிலையத்தின் தொடர் வைப்புத் தொகைக்கு 6.5 சதவீத வட்டி வழங்கப்படும். இதுதவிர, 1 ஆண்டு, 2 ஆண்டு கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமல் 

அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்தொகைக்கான புதிய வட்டி விகிதம் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். இது செப்டம்பர் 30ஆம் தேதி வரை இருக்கும். இது நடுத்தர கால முதலீட்டாளர்களுக்கான திட்டமாகும். ஆண்டுதோறும் 6.5 சதவீத வட்டி கிடைக்கும், ஆனால் காலாண்டு கலவையின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.100 மற்றும் அதற்குப் பிறகு ரூ.100இன் மடங்குகளில் எந்தத் தொகையையும் டெபாசிட் செய்யலாம். வங்கியைத் தவிர மற்ற தபால் நிலையங்களின் தொடர் வைப்புத்தொகை 5 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும். பின்னர் மீண்டும் 5 ஆண்டுகளுக்கு அதை நீட்டிக்கலாம். நீட்டிப்பின் போது, பழைய வட்டி விகிதங்கள் மட்டுமே கிடைக்கும். 

மேலும் படிக்க | ஸ்வீட் எடுத்து கொண்டாடுங்கள்... இந்த திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு - அதிகரிக்கும் லாபம்!

10 ஆயிரம் டெபாசிட் செய்தால் 7.10 லட்சம் கிடைக்கும்

தபால் அலுவலத்தில் RD கால்குலேட்டரின் படி, ஒரு முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்தால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு 7 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அவரது மொத்த வைப்பு மூலதனம் ரூ.6 லட்சமாகவும், வட்டிக் கூறு சுமார் ரூ.1 லட்சத்து 10 ஆயிரமாகவும் இருக்கும்.

எந்த தேதிக்குள் தவணையை சமர்ப்பிக்க வேண்டும்

நீங்கள் தபால் அலுவலகத்தில் தொடர் வைப்பு கணக்கை திறக்க விரும்பினால், 1-15 தேதிக்குள் கணக்கு தொடங்கப்பட்டால், ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாதத்தின் 15ஆம் தேதிக்குப் பிறகு கணக்கு தொடங்கப்பட்டால், ஒவ்வொரு மாத இறுதியிலும் தவணை செலுத்த நேரிடும்.

பெரிய இழப்பை ஏற்படுத்தும்

12 தவணைகளை டெபாசிட் செய்த பிறகு கடன் வசதியும் கிடைக்கும். வட்டி விகிதம் RD கணக்கு வட்டி விகிதத்தை விட 2 சதவீதம் அதிகமாக இருக்கும். 5 ஆண்டுகளுக்கு ஒரு நாள் முன்னதாகவே கணக்கு மூடப்பட்டால், சேமிப்புக் கணக்கு வட்டியின் பலன் மட்டுமே கிடைக்கும். தற்போது சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதம் 4 சதவீதமாக உள்ளது.

மேலும் படிக்க | இலவச ரேஷன் வாங்குபவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்... இனி இரட்டிப்பு பலன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More