Home> Lifestyle
Advertisement

மூத்த குடிமக்களுக்கு ICICI வங்கி சிறப்பு பரிசு; இந்த வட்டி விகிதம் அதிகரிப்பு

கோல்டன் இயர்ஸ் எஃப்டி திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு 6.35 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இதன் விகிதம் 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்களுக்கு ICICI வங்கி சிறப்பு பரிசு; இந்த வட்டி விகிதம் அதிகரிப்பு

இந்திய ரிசர்வ் வங்கி அதாவது ரிசர்வ் வங்கி இந்த மாதம் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. அதன்படி இந்த ரெப்போ விகிதத்தில் 40 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.40 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. ரெப்போ விகிதம் அதிகரிப்புக்கு பிறகு, கடனுக்கான வட்டி விகிதமும் அதிகரித்தது மேலும் வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது தனியார் துறையான ஐசிஐசிஐ வங்கி மூத்த குடிமக்களுக்கு சிறப்பு பரிசை வழங்க உள்ளது. அதன்படி ஐசிஐசிஐ வங்கியால் நடத்தப்படும் சிறப்பு எஃப்டி திட்டமான 'கோல்டன் இயர்ஸ் எஃப்டி' வட்டி விகிதங்கள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி: வட்டி விகிதத்தை அதிகரித்தது HDFC வங்கி 

புதிய கட்டணங்கள் மே 21, 2022 முதல் அமலுக்கு வந்தது
கோல்டன் இயர்ஸ் எஃப்டி திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு 6.35 சதவீத வட்டி வழங்கப்பட்டது. தற்போது இந்த விகிதம் 6.50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய கட்டணங்கள் மே 21, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் இயர்ஸ் எஃப்டி திட்டம் மே 2020 இல் தொடங்கப்பட்டது
இதற்கிடையில் மூத்த குடிமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு இந்த அற்புதமான திட்டம் ஐசிஐசிஐ வங்கிகளால் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தற்போது கோல்டன் இயர்ஸ் எஃப்டி திட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டி வழங்கப்படுகிறது.

ஐசிஐசிஐ வங்கியின் எஃப்டி விகிதங்கள் (2 கோடிக்குக் கீழே, மே 21 முதல் அமலுக்கு வரும்)
7 முதல் 14 நாட்கள் - 2.50%
15 முதல் 29 நாட்கள் - 2.50%
30 முதல் 45 நாட்கள் - 3.00%
46 முதல் 60 நாட்கள் - 3.00%
61 முதல் 90 நாட்கள் - 3.00%
91 முதல் 120 நாட்கள் - 3.50%
121 முதல் 150 நாட்கள் - 3.50%
151 முதல் 184 நாட்கள் - 3.50%
185 முதல் 210 நாட்கள் - 4.40%
211 முதல் 270 நாட்கள் - 4.40%
271 முதல் 289 நாட்கள் - 4.40%
290 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவானது - 4.50%
1 வருடம் முதல் 389 நாட்கள் வரை - 5.10%
390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது - 5.10%
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை - 5.10%
18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை - 5.10%
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை - 5.40%
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை - 5.60%
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை - 5.75%
5 ஆண்டுகள் (80சி எஃப்டி) - அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் - 5.60%

மேலும் படிக்க | ஆர்பிஐ அதிரடி முடிவு, வட்டி விகிதங்கள் உயர்ந்தன: வீடு, வாகன கடன் இஎம்ஐ அதிகரிக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More