Home> Lifestyle
Advertisement

Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு கவனத்திற்கு... ஓய்வூதியம் குறித்து வந்த முக்கிய அப்டேட்!

Old Pension Scheme: பழைய ஓய்வூதிய முறை குறித்தும், அதனை அமல்படுத்துவது குறித்தும் நிதியமைச்சகத்தின் தரப்பில் இருந்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு கவனத்திற்கு... ஓய்வூதியம் குறித்து வந்த முக்கிய அப்டேட்!

Old Pension Scheme: நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய முறை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது, பழைய ஓய்வூதிய முறையை (OPS) அமல்படுத்தும் அழுத்தம் மத்திய அரசுக்கு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. 

அதை செயல்படுத்துவது குறித்தும் அரசு குறிப்பை வழங்கியுள்ளது. பழைய ஓய்வூதிய முறை குறித்து நிதியமைச்சகத்தில் இருந்து தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முறையை அரசு எப்போது அதனை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை இங்கே அறிந்துகொள்ளலாம்.

நிதி அமைச்சகத்தின் தகவல்

ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறுஆய்வு செய்ய நிதி அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது. நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும் தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) தற்போதைய கட்டமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் தேவையா என்பதை இந்தக் குழு பரிந்துரைக்கும்.

மேலும் படிக்க | பெண்களுக்கு பம்பர் செய்தி: மோடி அரசின் அசத்தல் வருமானம் அளிக்கும் சேமிப்பு திட்டம்

2004ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த பணியாளர்கள் பலன் பெறுகின்றனர்

2004ஆம் ஆண்டுக்கு முன் அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன் அளிக்கப்படுகிறது. மறுபுறம், 2004 ஜனவரி முதல் அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெற்று வருகின்றனர். மத்திய அரசு தவிர, நாட்டின் 5 மாநில அரசுகளும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளன.

எந்தெந்த மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது?

ராஜஸ்தான் முதலில் பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த முடிவு செய்தது. அதன் பிறகு, பஞ்சாப், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில அரசுகளும் இதை அமல்படுத்துவதாக அறிவித்தன. 

ஆகஸ்ட் மாதத்திற்குள்...

அனைத்து அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஓய்வூதியத்தை வரும் ஆகஸ்ட் 31 வரை தேர்வு செய்யலாம். இதனுடன், ஆகஸ்ட் 31 வரை பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) தேர்ந்தெடுக்காத தகுதியான பணியாளர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று அரசு கூறியுள்ளது. 

மேலும் படிக்க | 8th Pay Commission: ஊழியர்களுக்கு பம்பர் செய்தி, விரைவில் 44% ஊதிய உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More