Home> Lifestyle
Advertisement

UPI மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவது எப்படி?

இனிமேல் இந்திய வாடிக்கையாளர்களும் அவர்களது ரூபே டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஐரோப்பாவில் பணம் செலுத்த முடியும்.  

UPI மூலம் இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு பணம் அனுப்புவது எப்படி?

என்பிசிஐ இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் லிமிடெட் ஐரோப்பிய கட்டணச் சேவை வேர்ல்டுலைனுடன் கூட்டு சேர்ந்துள்ளதால், இந்தியர்கள் விரைவில் ஐரோப்பாவில் யூபிஐ மூலமாக பணம் செலுத்திக்கொள்ள முடியும்.  என்ஐபிஎல் என்பது இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் பிரிவாகும். என்ஐபிஎல் மற்றும் வேர்ல்ட்லைன் கூட்டணி அமைத்திருப்பதன் முக்கிய நோக்கம் ஐரோப்பா முழுவதும் இந்திய கட்டண முறைகளை ஏற்றுக்கொள்வதை விரிவுபடுத்துவதேயாகும்.  மேலும் இந்த வலுவான கூட்டணி வணிகர்களின் பாயின்ட்-ஆஃப்-சேல் (பிஓஎஸ்) அமைப்புகளை யூபிஐ-லிருந்து பணம் செலுத்த அனுமதித்து, அதன்மூலம் ஐரோப்பியாவிலுள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதியை ஏற்படுத்தி தரப்போகிறது.

மேலும் படிக்க | ஒரே போனில் இரண்டு வாட்ஸ்சப் பயன்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை!

fallbacks

இந்தியாவில் இருந்து வரும் வாடிக்கையாளர்கள் தற்போது இன்டர்நேஷனல் கார்ட் நெட்வொர்க்குகள் மூலம் மட்டுமே பணத்தை செலுத்தி வருகின்றனர்.  ஆனால் இனிமேல் இந்திய வாடிக்கையாளர்களும் அவர்களது ரூபே டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி ஐரோப்பாவில் பணம் செலுத்த முடியும்.  யூபிஐ இப்போது உங்களை ஒரே ஸ்மார்ட்போனில் ஒன்றுக்கு மேற்பட்ட பல வங்கி கணக்குகளை பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்கிறது.  இதன்மூலமாக வணிகர்களும், வாடிக்கையாளர்களும் ஏராளமான பலன்களை பெறுவார்கள்.  கடந்த 2021 ஆம் ஆண்டின் தரவுகளின்படி யூபிஐ வாயிலாக செய்யப்படும் டிரான்ஸாக்ஷன்கள் 38.74 பில்லியனாகவும் அதன் மொத்த மதிப்பு 954.58 பில்லியன் அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது.   இதுவரை 714 மில்லியன் மேம்படுத்தப்பட்ட ரூபே கிரெடிட் கார்டுகளை என்பிசிஐ உள்நாட்டு மக்களுக்கு விநியோகித்து இருக்கிறது.  

பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இந்த செயல்முறையை விரிவுபடுத்த நினைப்பதாக என்பிசிஐ கூறியுள்ளது.  இந்த கூட்டணியின் மூலமாக ஐரோப்பிய சந்தைகளுக்கு நல்ல கவரேஜ் கிடைக்கும் என்று என்ஐபிஎல்-ன் தலைமை நிர்வாக அதிகாரி ரித்தேஷ் சுக்லா கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டணியானது இந்திய வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான கட்டண முறைகளை தொடர்ந்து பயன்படுத்த அதிகாரம் அளிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

மேலும் படிக்க | No Cost EMI-ல் பொருட்கள் வாங்க போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More