Home> Lifestyle
Advertisement

ஆதார் கார்டுடன் புதிய போன் நம்பரை இணைப்பது எப்படி?

UIDAI இணையதளத்தின் மூலம் உங்கள் ஆதார் கார்டுடன் புதிய போன் நம்பரை இணைக்க வேண்டும்.  

ஆதார் கார்டுடன் புதிய போன் நம்பரை இணைப்பது எப்படி?

இந்திய குடிமக்கள் அனைவரிடமும் அவசியம் ஆதார் அட்டை இருக்க வேண்டும்.  முன்னரெல்லாம் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை தான் தேவைப்பட்டது, ஆனால் தற்போது எல்லாவற்றையும் விட ஆதார் அட்டை தான் முக்கியமானதாக உள்ளது.  இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டைகளை இந்திய மக்களுக்கு (UIDAI) வழங்குகிறது.  இது அரசின் திட்டங்களுக்கு மட்டுமல்ல, நிதிச் சேவைகளுக்கும் அவசியமானதாக உள்ளது.  ஒருவரது  ஆதார் அட்டையில் அந்நபரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, புகைப்படம், கைரேகை, கருவிழி போன்ற முக்கியமான தகவல்கள் இடம்பெற்றுள்ளது. 
மேலும் ஆதார் அட்டையுடன் வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் காப்பீட்டுத் திட்டங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

fallbacks

மேலும் படிக்க | பெரிய நிவாரணம்! Aadhaar PAN Link: ஆதார் - பான் இணைப்பு; கால அவகாசம் நீட்டிப்பு!

ஆரம்பத்தில் ஆதார் கார்டு எடுக்கும்பொழுது சிறிய குழந்தைகளாக இருந்தவர்களுக்கு தற்போது முகமும், ரேகையும் மாறியிருக்கக்கூடும், சிலருக்கு பிறந்த தேதி சரியாக இல்லாமல் போகலாம், முகவரி போன்ற பல தகவல்கள் மாறியிருக்கலாம்.  அத்தகைய மக்களின் ஆதார் அட்டைகளில் தனிப்பட்ட தகவல்களைப் புதுப்பிக்க UIDAI ஆன்லைன் போர்ட்டலைத் தொடங்கியுள்ளது.  இதிலுள்ள படிவத்தைப் டவுன்லோடு செய்து, அருகிலுள்ள ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் மாற்ற நினைக்கும் தகவலை மாற்றி கொள்ளலாம்.  தற்போது உங்கள் ஆதார் அட்டையுடன் புதிய போன் நம்பரை எப்படி இணைக்கலாம் என்று பார்ப்போம்.

fallbacks

1) முதலில் UIDAI இணையதளத்தில் ask.uidai.gov.in க்குச் செல்லவும்.

2) தற்போது நீங்கள் வைத்திருக்கும் போன் நம்பரை பயன்படுத்தி உள்நுழையவும்.

3) ஆன்லைன் ஆதார் சர்விஸ் செக்ஷனிலிருந்து இருந்து மொபைல் நம்பர் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.

4) இப்போது அதில் கேட்கப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் கேப்ட்சா குறியீட்டை சரியாக நிரப்பவும்.

5) இப்பொது உங்கள் புதிய போன் நம்பருக்கு OTP வரும், அதனை அந்த தளத்தில் உள்ளிட்ட பிறகு 'சேவ் அண்ட் ப்ரொசீட் ' என்பதைக் கிளிக் செய்யவும்.

மேலும் படிக்க | ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தை மாற்ற ஆசையா? செயல்முறை இங்கே பார்க்கவும்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More