Home> Lifestyle
Advertisement

Ration Card: ஒரே நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி, அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Ration Card Latest News: பொதுவாக ரேஷன் கார்டு என்பது பொருட்களை வாங்க மட்டும் அல்லாது, இன்றைய காலக்கட்டங்களில் சிலிண்டர் வாங்கவும், அடையாள ஆவணமாகவும் உள்ளது.

Ration Card: ஒரே நாளில் ரேஷன் கார்டு பெறுவது எப்படி, அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உங்களிடம் ரேஷன் கார்டு இருந்தால், அரசு மலிவான தானியக் கடையில் இருந்து ரேஷன் பெறுவது எளிது. ஆனால் உங்களிடம் ரேஷன் கார்டு இல்லையென்றால், அதை முதலில் உருவாக்குவது கடினம். இருப்பினும், அதை உருவாக்கும் செயல்முறையை தற்போது அரசாங்கத்தால் ஆன்லைனில் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ரேஷன் கார்டு என்பது பொருட்களை வாங்க மட்டும் அல்லாது, இன்றைய காலக்கட்டங்களில் சிலிண்டர் வாங்கவும், அடையாள ஆவணமாகவும் உள்ளது. எனவே இப்போது நாம் ஒரே நாளில் எப்படி ரேஷன் பெறுவது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

இந்த நிலையில் இனி நீங்கள் ரேஷன் கார்டு பெற நினைத்தால், அதிகாரிகளின் பின்னால் சுற்றித் திரிய வேண்டியதில்லை. ஒரே நாளில் ரேஷன் கார்டு பெற முடியும். இதற்கு, விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் கொண்டு வருவது அவசியமாகும். எனவே உத்தரகாண்ட் மாநிலத்தில் மக்களின் புகார்களை கருத்தில் கொண்டு இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | திருமணத்திற்கு பிறகு பான் கார்டில் பெயரை மாற்றுவது எப்படி?

இதுவரை ரேஷன் கார்டுகளை பெற மக்கள் மாவட்ட வழங்கல் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. தொடர்ந்து வரும் புகார்களை கருத்தில் கொண்டு புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் விண்ணப்பித்த பிறகு, சில மணிநேரங்களில் சரிபார்த்த பிறகு உங்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும். தாள்களில் ஏதேனும் குறைபாடு இருந்தால், அதை சரி செய்து மறுநாளுக்குள் ரேஷன் கார்டு செய்து தரப்படும்.

இதற்குப் பிறகு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு தற்போதைய அரசின் மலிவான ரேஷன் திட்டத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் கார்டு பெறுவோர் நீண்ட வரிசையில் காத்து நிற்பதால், கடந்த சில நாட்களாக முழு அமைப்பும் ஆன் லைன் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், போதிய விழிப்புணர்வு இல்லாததால், ஆன்லைனில் ரேஷன் கார்டுகளை தயாரிப்பதற்கான விகிதம் மிகவும் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது.

மேலும் படிக்க | 7th Pay Commission: 18 மாத அரியர் தொகை விரைவில் கிடைக்கவுள்ளதா? அப்டேட் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More