Home> Lifestyle
Advertisement

ஜோதிகா-ன் அடுத்த பட குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

நடிகை ஜோதிகா 36 வயதினிலே, மகளீர் மட்டும் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து, தற்போது வெளியான நாச்சியார் திரைப்படம் அவருக்கு ஹாட்ரிக் வெற்றிப்படமாக அமைந்தது. 

இதையடுத்து, ஹிந்தி நடிகை வித்யா பாலனின் படமான "தும்ஹாரி சுலு" ரீமேக்கில் ஜோதிகா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஜோதிகாவின் மொழி பட இயக்குனரான ராதா மோகன் இயக்க உள்ளார்.

நடிகை வித்யா பாலனின் நடிப்பில் வெளியான படம் "தும்ஹாரி சுலு"-ன் கதைக்களம் திருமணமான ஒருபெண் வானொலியில் ஆர்.ஜே-வாக வேலை கிடைத்ததும் எவ்வாறு அவர்களின் வாழ்க்கை மாறுகிறது என்பாத்து பற்றிய திரைப்படம். இந்த கதைகளத்தில் ஜோதிகா நடிப்பதற்கு உடனே ஒப்புக்கொண்டதாக சமீபத்தில் கூறப்பட்ட நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகர் சூர்யா அவரது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில், மொழி படத்திற்கு பின்னர் இயக்குநர் ராதாமோகன் மற்றும் ஜோதிகா மீண்டும் இணைகின்றனர். இந்த படத்தை பொஃப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன் தயாரிக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

Read More