Home> Lifestyle
Advertisement

வங்கி ஊழியர்களுக்கு அடித்தது 100% சதவீத ஜாக்பாட்... உயரப்போகும் ஓய்வூதியம்

Bank Employees Pension: கடந்தாண்டு நவம்பர் 1ஆம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு 100 சதவீத டிஏ அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு அடித்தது 100% சதவீத ஜாக்பாட்... உயரப்போகும் ஓய்வூதியம்

Bank Employees Pension: பொதுத்துறை வங்கிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் 1ஆம் தேதிக்கு முன்பு ஓய்வு பெற்ற அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதிய பலன் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

வங்கி நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்திய முதல் கூட்டத்தில், 100 சதவீத டிஏ அடிப்படையில் ஓய்வூதியத்தை உயர்த்த ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.

இந்த முடிவில், 2022ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதிக்கு முன் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்களுக்கு சீரான 100% அகவிலைப்படி நடுநிலைமை அடிப்படையில் ஓய்வூதியத்தை அதிகரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முடிவினால், ஓய்வூதியம் மாதந்தோறும் சுமார் 800 ரூபாயில் இருந்து 16 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.

மேலும் படிக்க | புதிய எல்பிஜி கேஸ் இணைப்பு வேண்டுமா? இந்த ஆவணங்கள் இல்லாமல் பெற முடியாது!

இப்போது நிலைமை என்ன?

இதுவரை, 2022ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி வரை ஓய்வு பெற்ற அனைத்து வங்கி ஊழியர்களுக்கும் ஓய்வூதியம், டேப்பரிங் சதவீத ஃபார்முலா மற்றும் ஸ்லாப் முறையின் அடிப்படையில், வங்கி ஊழியர்கள் 2022ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அன்று ஓய்வு பெறுகின்றனர்.

மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் யுனைடெட் ஃபோரம் மற்றும் வங்கி யூனியன்கள் இடையே நடைபெற்ற இருதரப்பு கூட்டத்தில், நவம்பர் 1, 2022க்கு முன் ஓய்வு பெற்ற வங்கியாளர்களுக்கும் 100% அகவிலைப்படி நன்மை வழங்கப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது.

வங்கிகளில் 5 நாள் வேலை, 2 நாட்கள் விடுமுறை, மலிவு விலையில் மருத்துவக் காப்பீடு ஆகிய கோரிக்கைகளையும் இந்தக் குழு பரிசீலித்தது. கூட்டத்தில், நிலுவையில் உள்ள மற்ற அனைத்து பிரச்னைகளும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் முடிவு செய்யப்படும் என இந்திய வங்கிகள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

அதாவது, தற்போது 5 நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்பட்டால், அனைத்து ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 40 நிமிடங்கள் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது. தற்போதைய விதிகளின்படி இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளில் விடுமுறை உள்ளது. இது தவிர, ஊழியர்கள் மூன்றாவது மற்றும் முதல் சனிக்கிழமைகளில் வேலை செய்ய வேண்டும். தற்போது வாரந்தோறும் 2 நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருவதால் இந்த முடிவு ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனுடன், நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலையும் பெறுவது அவசியம் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

மேலும் படிக்க | ஆகஸ்ட் மாதத்தில் ரேஷன் பெற வேண்டுமா? அப்போ உடனே படியுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More