Home> Lifestyle
Advertisement

80 கோடி மக்களுக்கு நற்செய்தி: 2023 முதல் இந்த பொருட்கள் இலவசமாக கிடைக்கும்

Free Ration: நாட்டின் 80 கோடி மக்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. NFSA-ன் கீழ் 81.35 கோடி ஏழைகளுக்கு ஓராண்டுக்கான இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

80 கோடி மக்களுக்கு நற்செய்தி: 2023 முதல் இந்த பொருட்கள் இலவசமாக கிடைக்கும்

ரேஷன் கார்டு நன்மைகள்: நாட்டின் 80 கோடி மக்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. அதன்படி நாளை முதல் மோடி அரசு ஆண்டு முழுவதும் இலவச ரேஷன் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், 81.35 கோடி ஏழைகளுக்கு ஓராண்டுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்து இருந்தது. இருப்பினும், ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசின் இத்திட்டத்தின் பலனை நீங்கள் பெற முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே இலவச ரேஷன் பெற எந்த அட்டையை யார், எப்படி பெறுவது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

ரேஷன் கார்டு தயாரிப்பது எப்படி?
உங்கள் வீட்டில் இருந்தபடியே மின்- ரேஷன் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் எந்த அரசு அலுவலகத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. ரேஷன் கார்டு தயாரிக்க, உணவுத் துறையிலிருந்து விண்ணப்பப் படிவத்தைப் பெறுங்கள் அல்லது விண்ணப்பத்தின் PDF படிவத்தை nfsa.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். அதன் பிறகு படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களையும் தவறு செய்யாமல் நிரப்பவும். பின்னர் அனைத்து ஆவணங்களின் நகல்களை இணைத்து, படிவத்தை உணவுத் துறைக்கு சமர்ப்பிக்கவும். உங்கள் விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை சரிபார்த்த பிறகு, உங்களின் புதிய ரேஷன் கார்டு உருவாக்கப்படும்.

மேலும் படிக்க | EPFO புதிய விதி, ஊழியர்களுக்கு அதிக ஓய்வூதியம் கிடைக்கும்

எத்தனை நாட்களில் இந்த ரேஷன் கார்டு உருவாக்கப்படும்?
ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு உருவாக்கப்படும். ஆனால் இதற்கு உங்கள் விண்ணப்பத்தில் எந்த தவறும் இருக்கக்கூடாது மற்றும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் பிழை இருந்தாலோ, உணவுத் துறையின் ஆன்லைன் போர்ட்டலில் பிரச்னை இருந்தாலோ ரேஷன் கார்டு தயாரிப்பதில் சற்று தாமதம் ஏற்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | புத்தாண்டுக்கு கூகுள் வைத்திருக்கும் சர்ப்ரைஸ் - என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More