Home> Lifestyle
Advertisement

கொசுத் தொல்லை தாங்கலையா? இதோ Simple & low-cost நிவாரணம்...

இந்த கொசுத் தொல்லை தாங்கலைடா சாமி! என்று உண்மையிலுமே புலம்ப வைக்கிறதா கொசு? மிகவும் குறைந்த செலவில் சூப்பராக கொசுவை ஒழித்துக் கட்டும் வழிமுறைகளைச் சொன்னால் வேண்டாம் என்றா சொல்லப் போகிறீர்கள்? 

கொசுத் தொல்லை தாங்கலையா? இதோ Simple & low-cost நிவாரணம்...
புதுடெல்லி: 0.125 முதல் 0.75 அங்குல கொசு உங்களை இரவு முழுவதும் அலைக்கழிக்கக்கூடும், இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்படும் நீங்கள், காலையில் வெகுநேரம் தூங்கினால், அலுவலகத்திலும் கிடைக்கும் ஆப்பு.
கொசுவை கட்டுப்படுத்தினால் ஏற்படும் நன்மைகள் பலப்பல. ஏற்கனவே COVID-19 அனைவரையும் அவரவர் வீடுகளில் முடக்கியுள்ள சூழ்நிலையில்,  கொசுக்களில் இருந்து சுலபமான நிவாரணம் கிடைத்தால் நன்றாகத் தானே இருக்கும்?
கொசு, 2 வாரங்கள் முதல் 6 மாதங்கள் வரையில் சராசரியாக உயிர் வாழ்பவை. கொசுவின் இனப்பெருக்கத்தை ஒழிக்க ஒரே வழி தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றுவது தான். வயது வந்த கொசுக்களைக் கொல்ல பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துபவர்களும் உண்டு. 
எது எவ்வாறாயினும், கொசுக்கள் பரவுவதைத் தடுப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு பெரியளவில் பலன் ஏதும் இல்லை என்றும் புவி வெப்பமடைதல் கொசுக்களின் எண்ணிக்கையையும் விருத்தியையும் அதிகரிக்கும் என்று பல விஞ்ஞானிகள் கருதுகின்றனர் என நேஷனல் ஜியோகிராஃபிக் கூறுகிறது.
 
இந்த கொசுத் தொல்லையை சுலபமாகவும், மலிவாகவும் தீர்க்க சில வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றைத் தெரிந்துக் கொண்டால், கொசுவில்லா பெருவாழ்வை ஆரோக்கியத்துடன் வாழலாம்.
 
1. பூண்டு: பூண்டு கொசுக்களுக்கு ஆலகால விஷம் என்றே சொல்லலாம். பூண்டின் வாசனையே கொசுவுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே, சில பூண்டு பற்களை அரைக்க வேண்டும், அவற்றை கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொசுக்கள் அதிகம் இருக்கும் இடத்தில் இந்த பூண்டு நீரை தெளித்தால், போயே போச்சு, போயிண்டே, இட்ஸ் கான் என்று கொசு பறந்து போய்விடும்.
2. வேப்பங் கொளுந்து: கொசுக்களிலிருந்து விடுபட வேம்புக்கு நிகர் எதுவும் இல்லை. வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம விகிதத்தில் கலந்து பின்னர் உங்கள் சருமத்தில் தடவ வேண்டும். வேப்ப இலைகள் கொசுக்களை விலக்கி வைக்கும் குணத்தைக் கொண்டவை. சருமத்தில் வேம்பின் மணம் இருந்தால், கொசு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடி விடாதோ!  
3. கற்பூரம்: கற்பூரத்தைப் பற்ற வைத்தால், கொசுவின் இருப்பும் காற்றில் கரைந்து மறைந்துவிடும். பிரியாணி இலைகளுடன் சேர்த்து கற்பூரத்தை எரிக்கும் போது ஏற்படும் மணத்தாலும், புகையாலும் கொசுவின் உயிர் ஆதாரம், ஆதாரமற்று போய்விடும்.  
உலகில், 3,000 க்கும் மேற்பட்ட கொசுக்களின் இனங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் முக்கிய மூன்று வகை கொசுக்களே மனிதர்களுக்கு நோய்களை பரப்பும் பாதகத்தை செய்கின்றன.    அந்த மூன்றில், மலேரியாவை மக்களுக்கு ப்ரப்பும் என்ற பழியை சுமக்கும் இனம், அனோபிலிஸ் கொசுக்கள் மட்டுமே.
 
சமீபத்தில், இந்தியாவின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மலேரியா அல்லது டெங்கு மற்ற நோய்த்தொற்றுகளுடன் இணைந்து வாழக்கூடும் என்றும், எனவே இந்த நோய்த்தொற்றுகள் உள்ளவர்களுக்கு COVID-19 நோய் பாதிப்பு குறைவாக இருக்கும் என்பதற்கான வாய்ப்புகளை குறைக்காது என்று தெளிவுபடுத்தியிருந்தது.  
காய்ச்சல் உள்ளவர்களுக்கு செய்யப்படும் சோதனையில் கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டால், அது COVID-19க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் அல்லது மலேரியா, டெங்கு அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே  மழைக் காலத்திலும், மழைக்கு பிந்தைய காலகட்டத்திலும் கவனமாக இருந்து, மேற்சொன்ன குறிப்புகளை பின்பற்றினால், கொசு இல்லா, நோய் இல்லா பெருவாழ்வு வசப்படும்.
Also REad | அயோடின் குறைபாடு இருப்பதை அறிந்து கொள்வது எப்படி? சமாளிப்பதற்கான வழிகள் என்ன?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More