Home> Lifestyle
Advertisement

உடலை பிட்டாக வைத்திருக்க தினசரி இந்த வழிகளை பாலோ பண்ணுங்க!

சில நல்ல பழக்கவழக்கங்களை தினசரி பாலோ செய்து வந்தால், எந்தவித நோய்களும் இன்றி ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.   

உடலை பிட்டாக வைத்திருக்க தினசரி இந்த வழிகளை பாலோ பண்ணுங்க!

எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க உணவு கட்டுப்பாடு அவசியம். அதே போல தினசரி வாழ்க்கையில் சில நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். இதனை இளம் வயதில் இருந்து சரியாக செய்து வந்தால் வயதான காலத்தில் பெரும் உதவியாக இருக்கும். மகிழ்ச்சியாக வாழ பணம் அவசியம் என்றாலும், அந்த பணத்தை சம்பாதிக்க உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடலை கவனிக்காமல் பணத்திற்கு பின்னால் ஓடினால் அதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை. இன்றைய உலகில் சிறிய நோய் பாதிப்பிற்காக மருத்துவமனை சென்றாலும், நாம் முன்னாள் கவனிக்காமல் விட்ட பிரச்சனைகள் நம்மை சுற்றி வளர்ந்து நிற்கும்.

மேலும் படிக்க | குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்? புதிய பெற்றோர்களுக்கான சில சிம்பிள் வழிமுறைகள் இதோ..!

எனவே, நோய்கள் வந்த பிறகு மருத்துவமனைக்கு செல்வதைவிட, நோய்கள் வராமல் பார்த்து கொள்வது அவசியம். தினசரி வாழ்க்கையில் ஒருசில நல்ல பழக்கங்களை மாற்றி கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடலை பெற முடியும். மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தாலே, உடல் சார்ந்த பிரச்சனைகள் சரியாகிறது. எனவே முதலே மனதை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்களை சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள முடியும். இதன் மூலம் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகள் உங்களை சீண்டாது. உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள சில பழக்கங்களை தினசரி செய்ய வேண்டும். 

உடலை பிட்டாக வைத்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?

தினமும் 30 முதல் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும். தினசரி இதனை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். உங்கள் உடல் எடையை குறைக்கவும், முகத்தில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைக்கவும் இது உதவுகிறது. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். இளம் வயதிலேயே இதனை கடைபிடித்து வந்தால் வயதான காலத்தில் ஃபிட்டாக இருக்க முடியும். அதே போல தினசரி உணவு கட்டுப்பாடு கண்டிப்பாக இருக்க வேண்டும். இரவில் காரமான மற்றும் அதிகமான உணவுகளை சாப்பிட கூடாது. மேலும் சம்பந்தம் இல்லாத நேரத்தில் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிட கூடாது. இது போன்ற உணவு முறைகள் காரணமாக சிறு வயதிலேயே பல நோய்கள் ஏற்படுகிறது. 

உடலை நீரேற்றமாக வைத்து கொள்ள வேண்டியது அவசியம். தண்ணீர் தாகத்தை போக்க மட்டுமில்லாமல், உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்குகிறது. உடலை நீரேற்றமாக வைத்திருப்பதால் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு, தண்ணீர், உடற்பயிற்சியுடன் சேர்த்து சரியான தூக்கம் உடலுக்கு அவசியம். இரவு சீக்கிரம் தூங்கி, காலையில் சீக்கிரம் எந்திரித்தால் உடலில் பாதி நோய்கள் வர வாய்ப்பில்லை. இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்கு மேல் எழுவது மிகவும் நல்லது. காலை உணவை 9 மணிக்குள்ளும், இரவு உணவை 8 மணிக்கு முன்பும் சாப்பிட்டு பழக வேண்டும்.

மேலும் படிக்க | Parenting Tips: உங்கள் குழந்தைகளை அறிவாளியாக மாற்றுவது எப்படி? சிம்பிள் டிப்ஸ் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More