Home> Lifestyle
Advertisement

சமந்தா போல உடலை Fit -ஆக வைத்துக்கொள்வது எப்படி? ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

Samantha Fitness Secrets: பிரபல நடிகை சமந்தா எப்படி தனது உடலை இவ்வளவு கச்சிதமாக வைத்துள்ளார் என்று நாம் அடிக்கடி யோசிப்போம். அவரது ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? 

சமந்தா போல உடலை Fit -ஆக வைத்துக்கொள்வது எப்படி? ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

தென்திரையுலகின் பிரபலமான நடிகையாக வலம் வருபவர், சமந்தா. தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டிலும் தடம் பதித்துக்கொண்டிருக்கும் இவர், உடல் மற்றும் மனது சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் ஸ்ட்ரிக்டாக இருப்பார். இதனால், அவரது உடல் மிகவும் திடமாக இருக்கும். அவர் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க. 

சாதாரண உடற்பயிற்சி:

உடலை திடமாக வைத்திருக்க எண்ணும் பலர், ஜிம்மில் சேர்ந்து தூக்க முடியாத உடற்பயிற்சி எந்திரங்களை தூக்கி பிரச்சனையில் மாட்டிக்கொள்வர். நீங்கள் முதன் முதலாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிப்பவராக இருந்தாலும் சரி, ஜிம் ஃப்ரீக்காக இருந்தாலும் சரி. சில நாட்களுக்கு இயந்திரங்கள் இல்லாமல் சாதாரணமக வர்க்-அவுட் செய்யலாம். கடந்த ஆண்டு சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். லெவல்-அப் சேலஞ்ச் எனும் பெயரில் இயந்திரங்கள் இல்லாமல் சில நாட்கள் வர்க்-அவுட் செய்தார். இதனை, தனது உடற்பயிற்சியாளரின் அறிவுரையின் பேரில் அவர் ஆரம்பித்தார். இவ்வாறு செய்வது எளிதான முறையில் நம் கொழுப்பை குறைக்க உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மேலும் படிக்க | வயதில் மூத்த பெண்களை விரும்பும் மெஜாரிட்டி ஆண்கள்... ஏன் தெரியுமா?

யோகா: 

சமந்தாவின் உடற்பயிற்சிகளுள் முக்கிய பங்கு வகிப்பது, யோகா. இதில், துணியை வைத்து செய்யும் ஏரியல் யோகாவை சமந்தா அடிக்கடி செய்வாராம். இதை தகுந்த பயிற்சியாளரின் அறிவுருத்தல் இல்லாமல் செய்ய வேண்டாம். இதை செய்வதனால் உடலில் உள்ள ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

கயிறு இழுத்தல்:

பொங்கல் திருவிழாக்களில் நம் பலத்தை காண்பிக்கும் வகையில் நடைபெறும் விளையாட்டுகளுள் ஒன்று, கயிறு இழுத்தல். இரண்டு பக்கமும் இரு அணியினர் நின்று கொண்டு கயிறுகளை இழுக்க வேண்டும். யார் இன்னொருவரை வலைத்து போடுகின்றனரோ அவர்தான் அந்த விளையாட்டின் வெற்றியாளர். இதை விளையாட்டாக மட்டுமன்றி ஒரு உடற்பயிற்சியாகவும் செய்ய முடியும். சமந்தா தனது உடலை திடமாக வைத்திருக்க கைய்யிலெடுக்கும் உடற்பயிற்சிகளுள் இதுவும் ஒன்று. இது, உங்கள் தோள்பட்டை, கை, முட்டி, பாதம், குதிக்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தசைகளை வலுவாக்கும், தேவையற்ற கொழுப்புகளையும் குறைக்கும். 

பளு தூக்குதல்:

100-200 கிலோவையெல்லாம் தூக்க வேண்டாம். உங்களால் தூக்க முடியும் அளவிற்கு இருக்கும் டம்புள்ஸை எடுத்து அதை தூக்கவும். இது, கண்டிப்பாக உங்கள் கைகளில் உள்ள தசைகளை குறைக்க உதவும். மேலும், உங்கள் மெட்டபாலிசத்தை அதிகரித்து எலும்பு மற்றும் ஜாய்ண்ட் பகுதிகளுக்கு வலிமையை தரும். சமந்தா, இந்த பயிற்சியை தவறாமல் மேற்கொண்டு வருகிறாராம். 

சைக்கிள் ஓட்டுங்கள்:

“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்..” என பாடல் பாடியவாறு ஜாலியாக சைக்கிள் ஓட்டி பழகுங்கள். சைக்கிள் ஒட்டுவதால் நம் உடல்நிலை, மனநிலை ஆகிய இரண்டுமே சீராகும். இது, மனதிற்கு அமைதி தரும். உடலுக்கு வலிமை தரும். இதுவும் ஒரு வகையான உடற்பயிற்சிதான். இதனால் நம் காலில் உள்ள தசைகள் வலுபெறும். சமந்தாவும் நன்கு சைக்கிள் ஓட்டி பழகுவாராம்.

மேலும் படிக்க | Trisha: ‘இது தெரியமா போச்சே..’ த்ரிஷாவின் மென்மையான அழகின் ரகசியம் இதுதானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More