Home> Lifestyle
Advertisement

'ரோஸ் டே' கொண்டாடுறதுக்கு முன்னாடி இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க!

பிப்ரவரி-14ம் தேதி வரும் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி-7ம் தேதி 'ரோஸ் டே' கொண்டாடப்படுகிறது.  

'ரோஸ் டே' கொண்டாடுறதுக்கு முன்னாடி இதையெல்லாம் தெரிஞ்சிக்கோங்க!

காதலர் தினம் (Valentines Day) உலகம் முழுவதும் காதலர்களால் கொண்டாடப்படுகிறது.  சிங்கில்ஸ்களுக்கு வெறுப்பான நாளாகவும், காதலர்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும் நாளாகவும் அமையும் நாள் பிப்ரவரி-14.   இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பகிர்ந்துகொள்ளும் விதமாக  இணையருக்கு வாழ்த்து அட்டை, பூக்கள், பரிசு பொருட்கள் போன்றவற்றை கொடுத்து மகிழ்வார்கள், புதிதாகவும் சில ஜோடிகள் இந்நாளில் காதலர்களாகவும் இணைவார்கள்.  முன்பெல்லாம் காதலர் தினத்தை மட்டும் கொண்டாடியவர்கள் தற்போது ஒரு வாரம் முன்னதாகவே Valentine Week கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள்.  அதன்படி பிப்ரவரி-7ம் தேதி முதல் பிப்ரவரி-14ம் தேதி வரை கொண்டாடப்படும் தினங்களாவன,

fallbacks

ALSO READ | Cutest bride: இவ்ளோ அழகான மணமகளா? திருஷ்டி சுத்திப்போடுங்க! வைரல் மணமகள்

பிப்ரவரி 7-ரோஸ் டே 
பிப்ரவரி 8-ப்ரொபோஸ் டே 
பிப்ரவரி 9-சாக்லேட் டே 
பிப்ரவரி 10-டெட்டி டே 
பிப்ரவரி 11-ப்ராமிஸ் டே 
பிப்ரவரி 12-ஹக் டே 
பிப்ரவரி 13-கிஸ் டே 
பிப்ரவரி 14- வேலண்டைன்ஸ் டே    

இதன்படி Valentine Weekன் முதல் நாளான இன்று 'ரோஸ் டே' கொண்டாடப்படுகிறது.  இந்நாளில் காதலர்களாக உள்ளவர்களும், காதலிக்க தொடங்கபோகுபவர்களும் ஒருவருக்கொருவர் ரோஸ்களை பரிமாறிக்கொள்வார்கள்.  காதலர்கள் மட்டுமல்லாது நண்பர்களும் இந்த தினத்தை மகிழ்வோடு கொண்டாடுகின்றனர், ஒவ்வொரு உறவின் வகையைப் பொறுத்தும் 'ரோஸ் டே' பல்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது.  ஒருவருக்கு சிவப்பு ரோஜா, மஞ்சள் ரோஜா, ஆரஞ்சு ரோஜா அல்லது ஒரு வெள்ளை ரோஜா கொடுக்கலாம்.

fallbacks

மஞ்சள் ரோஜா எப்போதும் நட்பின் உணர்வை வெளிப்படுத்துகிறது.  வெள்ளை ரோஜா தூய்மை மற்றும் அப்பாவித்தனத்தை பிரதிபலிக்கிறது, மேலும் இது திருமணத்திற்கான சரியான விருப்பமாக அமைகிறது.  ஆரஞ்சு ரோஜாக்கள் உற்சாகத்தையும், ஆர்வத்தையும் குறிப்பதாக அமைகிறது.  ஆனால் மக்கள் அதிகமாக வசிவப்பு மற்றும் வெள்ளை நிற ரோஜாக்களையே அதிகமாக வாங்குகின்றனர்.  கண்ணை கவரக்கூடிய சிவப்பு ரோஜாக்கள் காதல் மற்றும் ரொமான்ஸை அடையாளப்படுத்துகின்றன, காதலர் தினத்துக்கான சரியான தேர்வு சிவப்பு நிற ரோஜாக்கள் தான்.  மேலும் இவை நன்றியுணர்வு, பாராட்டு, மகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றைக் குறிக்கின்றன.  இந்த கொரோனா தொற்று காலத்தில் நேரடியாக பூக்களை கொடுக்க முடியாமல் இருந்தாலும் 'ரோஸ் டே'வை கொண்டாடும் விதமாக வாழ்த்து அட்டைகள், ரோஸ் டே குறித்த மெஸேஜ்களும் அனுப்பப்படுகின்றன.

அதில் சில மெசேஜ்கள் பலரையும் கவர்ந்துள்ளன.  உதாரணமாக, "நான் ஒரு பூவைக் கேட்டேன், ஆனால் கடவுள் எனக்கு ஒரு ரோஜாவைக் கொடுத்தார், அந்த ரோஜா நீதான். இனிய ரோஜா தின வாழ்த்துக்கள்!.   எங்கள் காதல் ரோஜா போன்றது, அது பூத்து மலரும், என்றென்றும் இனிய ரோஜா தின வாழ்த்துக்கள்!.  அன்பே, என் வாழ்வில் அன்பின் நறுமணத்தை நிரப்பினாய், மிகவும் அழகாக செய்ததற்கு நன்றி, இந்த அழகான ரோஜா நாளில் என் ரோஜாவுக்கு ஒரு ரோஜா, இனிய ரோஜா நாள் அன்பே!" இதுபோன்று மனம் கவரும் பல மெசேஜ்கள் காதலர்களுக்குள் பரிமாறப்பட்டு வருகிறது.

ALSO READ | மேடையில் மணமகன் மடியில் விழுந்த நண்பன்! வைரல் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More