Home> Lifestyle
Advertisement

ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: இந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்

சந்திர கிரகணம் இன்னும் சில நாட்களில் நடக்கப் போகிறது. பஞ்சாங்கத்தின் படி, 2022 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 16 மே 2022 அன்று நிகழும்.

ஆண்டின் முதல் சந்திர கிரகணம்: இந்த ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்

ஜோதிடத்தின் பார்வையில் 16 மே 2022 அன்று சந்திர கிரகணம் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில் சந்திர கிரகணம் ஒரு நல்ல வானியல் நிகழ்வாக கருதப்படுவதில்லை. சந்திர கிரகணத்தின் போது சந்திரன் பாதிக்கப்படுகிறார். சந்திர கிரகணத்தின் தாக்கம் மனிதர்களின் வாழ்கௌயில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரத்தின் படி சந்திரன் நீர் கிரகமாக கருதப்படுகிறது. சந்திரனின் நிலை குறைவதும் அதிகரிப்பதும் மனிதர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் சந்திர கிரகணம் 16 மே 2022 அன்று நிகழ உள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் ஏற்பட உள்ளன. அதில் 2 சூரிய கிரகணங்கள் மற்றும் 2 சந்திர கிரகணங்கள். இதில், ஏப்ரல் 30 ஆம் தேதி ஏற்பட்ட சூரிய கிரகணம் ஒரு பகுதி சூரிய கிரகணம். ஆனால் மே 16ம் தேதி நிகழப்போகும் சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருக்கும். இந்த சந்திர கிரகணம் சில ராசிக்காரர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது, சந்திரன் கடகத்தில் உயர்ந்தவராகவும், ரிஷபத்தில் பலவீனமாகவும் கருதப்படுகிறார். இம்முறை விருச்சிக ராசியில் சந்திரகிரகணம் ஏற்படப் போவதால் சில ராசிக்காரர்களுக்கு விசேஷ பலன் கிடைக்கும்.

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்

ரிஷபம்
சந்திர கிரகணத்திற்குப் பிறகு, உங்கள் வாழ்க்கையில் சிறிது குழப்பமான சூழ்நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் சில தடைகள் ஏற்படலாம். பணம் தொடர்பான விஷயங்களில் விரும்பிய பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. உடல் நலத்திலும் அக்கறை காட்ட வேண்டியிருக்கும். நீங்கள் ஏற்கனவே ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள், சிகிச்சையில் எந்த வித அலட்சியத்தையும் காட்டாதீர்கள்.

கன்னி 
நெருங்கிய உறவில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். மூத்த சகோதர சகோதரிகளுடன் சுமுகமான உறவைப் பேண முயற்சி செய்யுங்கள். பண தட்டுபாடு ஏற்படலாம். உங்கள் திருமண வாழ்க்கையை பாதிக்கலாம். மன உளைச்சல் ஏற்படும். காதல் உறவுகளிலும் சவால்கள் இருக்கலாம். 

விருச்சிகம்
உங்கள் ராசியில் சந்திர கிரகணம் நடக்கப்போகிறது. எனவே, கிரகணத்தின் அதிகபட்ச பலன் உங்கள் சொந்த ராசியில் இருக்கும். இதன் போது சில சிரமங்களை சந்திக்க நேரிடும். சுயநலத்திற்காக எதையும் செய்ய தயாராக இருப்பீர்கள், அதை முடிந்த வரை தவிர்கவும். குழப்பமும் ஏற்படலாம். எனவே, ஒரு முடிவை எடுப்பதற்கு முன், நன்கு அலோசித்து எடுக்கவும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

சந்திர கிரகண நேரம்
சந்திரகிரகணம் மே 16ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் தென்மேற்கு ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகள், தென் அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் தெரியும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More