Home> Lifestyle
Advertisement

Mahashivratri 2022: திரிசூலதாரி சிவனின் ஆயுதங்கள்! அண்டத்தை பிண்டமாக்கும் சிவாயுதங்கள்

திரிசூலம் மட்டுமல்ல, சிவபெருமானின் ஆயுதங்களின் முன் எது வந்தாலும் அது நிர்மூலமாகிவிடும். முக்கண்ணனுக்கு ஆயுதங்களைத் தவிர நெற்றிக்கண்ணே மாபெரும் ஆயுதம்...

Mahashivratri 2022: திரிசூலதாரி சிவனின் ஆயுதங்கள்! அண்டத்தை பிண்டமாக்கும் சிவாயுதங்கள்

புதுடெல்லி: சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் முக்கண்ணன். இரு கண்களைத் தவிர, புருவங்களின் மத்தியில் மூன்றாவது கண்ணாக நெற்றிக்கண் 
சிவன் தனது நெற்றிக்கண்ணை திறந்தால், பிரபஞ்சமேபஸ்பமாகிவிடும்.

ஆக்கும் கடவுள் பிரம்மன் என்றும், காக்கும் கடவுள் விஷ்ணு என்றும், அழிக்கும் கடவுள் சிவன் என்றும் இந்து மரபில் நம்பப்படுகிறது. எனவே, அழிக்கும் தொழிலை செய்யும் சிவபெருமானிடம் பல ஆயுதங்கள் உண்டு. 

சிவபெருமானின் நெற்றிக்கண்ணே மாபெரும் ஆயுதம் என்றாலும் முக்கண்ணனிடம் பேரழிவு தரும் ஆயுதங்கள் பல உண்டு. இந்த ஆயுதங்கள் அனைத்தும் உலகையே அழிக்கக் கூடியவை. காலனாய் உருவெடுக்கும் மகாதேவனின் இந்த ஆயுதங்கள் பற்றி மத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க | மகா சிவராத்திரி பஞ்சகிரகி யோகத்தால் அமோகமான பலன்கள் கிடைக்கும்

சிவபெருமானின் சிறப்பான ஆயுதங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

திரிசூலம்
திரி என்றால் மூன்று என பொருள்படும். மூன்று கூர்முனைகளை உடைய ஆயுதம் திரிசூலமாகும். சிவனின் திரிசூலம் அவரது வடிவத்துடன் தொடர்புடையது. திரிசூலதாரி என்ற பெயர் பெற்ற சிவபெருமான் பல அசுரர்களைக் கொன்றார். இலங்கையின் அரசன் ராவணனின் பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு பரிசாக திரிசூலத்தைக் கொடுத்தான். 

ராமனின் கைகளால் ராவணன் இறந்த பிறகு, திரிசூலம் சிவனிடமே சென்று சேர்ந்தது.  திரிசூலம் என்பது, உடல், பொருள், உயிர் ஆகிய மூன்று வகையான துன்பங்களின் அழிவைக் குறிக்கிறது என்று கூறப்படுகிறது. சத், ரஜ, தம என மூன்று வகை குணங்களைக் கொண்டது திரிசூலம்.

fallbacks

சக்கரம்
விஷ்ணுவின் சுதர்சன சக்கரத்தை உருவாக்கியவர் சிவபெருமான் தான். சுதர்சன சக்கரத்தை சிவபெருமான் விஷ்ணுவுக்கு கொடுத்துவிட்டார். அன்னை பார்வதிக்கு ஒருமுறை சுதர்சன சக்கரம் தேவைப்பட்ட போது, தனது சகோதரி உமையாளுக்கு  அதைக் கொடுத்ததாக கூறப்படுகிறது. 

பின்னர் அன்னை பார்வதி, அதை பரசுராமரிடம் கொடுத்தார், அது, அவரிடமிருந்து கிருஷ்ணரிடம் வந்து சேர்ந்தது. சுதர்சனம், விஷ்ணுவின் சக்கரமாக கருதப்பட்டால்,  சிவபெருமானுக்கும் ஒரு சக்கரம் உண்டு. அதன் பெயர் பாவரேந்து.

மேலும் படிக்க | மகாசிவராத்திரியில் கோள்களின் அற்புத சங்கமம்!

பிநாகம்  மற்றும் சிவ தனுசு ஆகிய இரண்டுமே சிவபெருமானுடைய இரண்டு வில்கள் ஆகும். இரண்டுமே பேரழிவு தருபவை.  கடவுள்களின் கட்டிடக் கலைஞரான விஸ்வகர்மா இந்த இரண்டையும் உருவாக்கினார்.

சிவபெருமான் பிநாக வில்லால் திரிபுரங்களை அழித்தார். அதனால் தான் திரிபுராரி என்று பெயர் பெற்றார் சிவபெருமான். 

சிவபெருமான் சிவதனுசை,  தனது உயர்ந்த பக்தரான மன்னன் தேவரதரிடம் ஒப்படைத்தார். அவர் ஜனக மன்னரின் மூதாதையர். இந்த வில் சீதா தேவியின் சுயம்வரத்தில் பகவான் ஸ்ரீ ராமரின் கைகளால் முறிக்கப்பட்டது.  பிநாக வில்லை,கம்ச வதத்தின் போது உடைத்தார்.

இவற்றைத் தவிர, சிவனிடம் கட்வங்கம் என்ற காபாலிக ஆயுதமமும், கோடாரி போன்ற அமைப்பினை உடைய மழு  மற்றும் சந்திரஹாசம்  என்ற வாளும் உண்டு.

மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் இன்று முதல் பிரகாசிக்கும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More