Home> Lifestyle
Advertisement

ஆணுறை-யின் அடையாளமாக மாறிய பிரபல நடிகை!

தற்போது நெட்டீசன்கள் இவரை கலாய்பதா இல்லை புகழ்வதா? என்று குழப்பத்தில் உள்ளனர்.

ஆணுறை-யின் அடையாளமாக மாறிய பிரபல நடிகை!

பிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் "Beboy ஆணுறையின்" அம்பாசிடராக மாறியுள்ளார்.

ராக்கி சாவந்த்: இந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி, நாட்டியக் கலைஞர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பலதுறைகளில் ரெக்கை கட்டி பறப்பவர். தமிழ்(கம்பீரம்) திரைப்படம் உள்பட இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் சர்ச்சைகளால் சூழப்பட்ட நடிகை.

இவர் தற்போது "Beboy ஆணுறையின்" அடையாளமாக மாறி வருகின்றார். முன்னதாக இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் "Beboy ஆணுறையின்" வகைகள் பற்றி வீடியோ ஒன்றினை பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவினால் நெட்டீசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இவர், "Beboy ஆணுறை" குறித்து தனது கருத்தினை தற்போது தெரிவித்துள்ளார். 

"நாட்டில் அதிகமான ஆணுறை விளம்பரங்கள் மற்றும் ஆணுறை குறித்த விழிப்புணர்வு தேவைபடுகிறது. பாலியல் என்ற வார்த்தை கெட்ட வார்த்தை இல்லை, விரிவாக தெரிந்து கொள்ள வேண்டிய வார்த்தை. ஏனெனில் பாலியல் நோய்களின் பாதிப்புகளின் எண்ணிக்கையை இது குறைக்க உதவுகிறது

"Beboy ஆணுறை" குறித்து சமூக ஊடகங்களில் நான் தெரிவிக்கும் கருத்துக்களை மக்கள் எப்படி பார்கிறார்களோ, நான் விழிப்புணர்வு செயல்பாடாகவே பார்க்கின்றேன். இதைப் பற்றி யார் என்ன கூறினாலும் எனக்கு கவலை இல்லை" என பகிரங்கமாக மனம் திரந்துள்ளார்.

இவரின் பகிரங்க கருத்தால், தற்போது நெட்டீசன்கள் இவரை கலாய்பதா இல்லை புகழ்வதா? என்று குழப்பத்தில் உள்ளனர்.

Read More