Home> Lifestyle
Advertisement

இனி ஃபேர் & லவ்லியில் 'ஃபேர்' கிடையாது... பெயரை மாற்றிய HUL..!

ஃபேர் & லவ்லி என்ற அழகு சாதன கிரீமில் இருக்கும் ஃபேர் என்ற வார்த்தையை நீக்கப் போவதாக அதன் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது...!

இனி ஃபேர் & லவ்லியில் 'ஃபேர்' கிடையாது... பெயரை மாற்றிய HUL..!

ஃபேர் & லவ்லி என்ற அழகு சாதன கிரீமில் இருக்கும் ஃபேர் என்ற வார்த்தையை நீக்கப் போவதாக அதன் தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது...!

இந்தியாவில் பெண், ஆண் என வேறுபாடு இல்லாமல் மிக அதிக அளவு உபயோகிக்கப்படும் அழகு சாதன சாதனங்களில் ஒன்று "ஃபேர் & லவ்லி, இது ஒரு ஹிந்துஸ்தான் யூனிலீவர் (Hindustan Unilever) நிறுவனத்தின் தயாரிப்பாகும். இதனை பலரும் தங்களின் அழகை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தி வருகின்றனர். அந்த நிறுவனமும் இதனை பயன்படுத்தினால் அனைவரும் சிவப்பாக மாறிவிடலாம் என்றே பல ஆண்டுகளாக விளப்பரப்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், இந்துஸ்தான் யூனிலீவர் தனது இந்திய பிரிவில் விற்பனை செய்யப்பட்டு வரும் அழகு கிரீமான 'ஃபேர் அண்ட் லவ்லி'-யை மறுபெயரிடுவதாக தெரிவித்துள்ளது. இந்த பெயர் கறுப்பு நிற சருமத்தின் மீதான தவறான நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து, இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தரப்பில் கூறும்போது, தங்களது பொருளின் பெயரில் உள்ள 'ஃபேர்' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த கிரீம் புதிய பெயர் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக் காத்திருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் சில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அது கூறியுள்ளது.

READ | பான், ஆதார் அட்டை இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31, வரை நீட்டிப்பு..!

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்தியாவில் விற்கப்படும் தங்களது இரண்டு தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துபோவதாக அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு ஹிந்துஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியாவில் மட்டும் ஃபேர் & லவ்லி என்ற அழகு சாதன பொருள் ஏறக்குறை ஒரு ஆண்டிற்கு 560 மில்லியன் டாலர் அளவுக்கு விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More