Home> Lifestyle
Advertisement

உயிருக்கு போராடும் இரண்டு முகங்களுடன் பிறந்த அரியவகை பூனை!

கலிபோர்னியா மாகாணத்தில்  பூனை ,ஒரு உடல் மற்றும் இரண்டு முகங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றது..!

உயிருக்கு போராடும் இரண்டு முகங்களுடன் பிறந்த அரியவகை பூனை!

கலிபோர்னியா மாகாணத்தில்  பூனை ,ஒரு உடல் மற்றும் இரண்டு முகங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றது..!

நம்மில் சிலருக்கு செல்ல பிராணிகள் மீது அதீத அக்கறையும் பாசமும் உண்டு. நான் அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் மாற்றுவதற்காக சில பயிற்சிகளை அவற்றிற்கு நாம் கற்றுக்கொடுப்பது உண்டு. அது விளையாட்டாக இருக்கட்டும் உணவு உண்ணும் முறையாக இருக்கட்டு நாம் சொல்வதை அப்படியே கடைபிக்க நாம் கற்றுக்கொடுத்து வளர்ப்போம். 

பெரும் பாலும் மக்களில் அதிகம் வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதாக பல ஆய்வில் தெரிவித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் நம் வீட்டில் செல்லப்பிராணிகள் செய்யும் குறும்புத்தனத்தை நாம் வீடியோவாக பதிவு செய்து அதை சமூகவளைதலத்தில் பதிவிட்டும் வருவதும் வழக்கம். இந்நிலையில், அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில்  பூனை ,ஒரு உடல் மற்றும் இரண்டு முகங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றது. 
இந்த இரண்டு முகப் பூனையை, கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர். டிரான் என்பவர் தத்தெடுத்து அதை வளர்த்து வருகிறார்.

இந்த பூனையின் இரண்டு முகத்திலும் இரண்டு வாய்கள் இருப்பதால்,  ஒரு முகம் பசி எடுக்கும்போது, மற்றொன்றும் உணவு சாப்பிட முயல்கிறது. தற்போது, இதன் பார்வைக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்தாலும் இந்த இரண்டு முகம் கொண்ட பூனை இன்னும் சில காலம்தான் உயிர்வாழும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த பூனையில் விடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

 

Read More