Home> Lifestyle
Advertisement

திருவண்ணாமலை தீபம் குறித்த இந்த முக்கியத் தகவல்கள் தெரியுமா?

கார்த்திகை தீபநாளில், சிவபெருமான் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர். 

திருவண்ணாமலை தீபம் குறித்த இந்த முக்கியத் தகவல்கள் தெரியுமா?

இன்று கார்த்திகை மாதம் பவுர்ணமி நாள். தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபம் மிக விஷேசமாக கொண்டாடப்படுவது வழக்கம். சிவ பெருமானின் பஞ்சபூத தளங்களில் அக்னித் தளமாக விளங்குவது திருவண்ணாமலை. திருவண்ணாமலை தீபம் குறித்த இந்த முக்கியத் தகவல்கள் தெரியுமா?

காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும். நினைத்தாலே முக்தி தரும் தலம் திருவண்ணாமலை. அதற்கு காரணம், கார்த்திகை தீபநாளில், சிவபெருமான் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம்.இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர். 

பிரம்மாவும், விஷ்ணுவும் நெருப்பாக நின்ற சிவபெருமானின் அடிமுடி காண முயன்றனர். நெருப்பாக நின்ற சிவன் (Lord Shiva), மலையாக மாறி திருவண்ணாமலையானது. திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. மலையின் அடிவாரத்தில் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. தூரம் உள்ளது.

திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது.மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

fallbacks

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு பரணி தீபம், அண்ணாமலையார் தீபம்,விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும். இவை பஞ்ச தீபங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கார்த்திகை தீபம் தினத்தன்று சிவாலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை.

தீப நாளில் மலை மேல் ஏற்றப்படும் தீபத்தைக் காண முடியாதவர்கள், தீப தரிசன நேரத்தில் திருவண்ணாமலை தீபத்தை நினைத்தாலே,அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள சொர்ண பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள். பிறகு மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபம் ஏற்றுவார்கள்  

திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், “அண்ணாமலையாருக்கு அரோகரா”என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள்.  சக்தியும் சிவமும் ஒன்றே என்ற உண்மையை பிருங்கி முனிவருக்கு உணரவைத்து,சிவன் அர்த்தநாரீஸ்வர வடிவம் எடுத்த பெருமையை உடைய தலம் இது.

READ ALSO | கார்த்திகை பவுர்ணமியில் திருவண்ணாமலை மகாதீபம்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை.அப்படி வரும் சித்தர்கள்,மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள்.இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை, தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.

திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை (Karthigai Deepam) நேரில் பார்ப்பவர்களுக்கு 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும். அதுமட்டுமல்ல, திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து நமசிவாய என்ற பஞ்சாட்சரத்தை உச்சரித்தால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால்,அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம். கிரிவலத்தைப் பற்றிய மற்றுமொரு முக்கிய செய்தி. தீபத் திருநாளில் 5 தடவை திருவண்ணாமலையை கிரிவலம் வந்தால், செய்த பாவங்கள் அனைத்தில் இருந்தும் முக்தி கிடைக்கும்.  

கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும். கார்த்திகை  மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

ALSO READ: இந்த நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம்; இந்த ‘3’ ராசிக்காரர்களுக்கும் கவனம் தேவை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More