Home> Lifestyle
Advertisement

தீபாவளி பற்றி காலம் காலமாக கூறப்பட்ட இந்த விஷயங்கலாம் பொய்யா?

சிலர் தீபாவளி கொண்டாடப்படுவது நரகாசுரனை க்ரிஷணன் அழித்ததற்காக என்றும், சிலர் இராவணனை வென்ற பிறகு ராமர் அயோத்திக்கு வந்ததை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது என்று கூறுகின்றனர்.  

தீபாவளி பற்றி காலம் காலமாக கூறப்பட்ட இந்த விஷயங்கலாம் பொய்யா?

தீபாவளி என்பது ஐந்து நாட்கள் உற்சாகமாக கொண்டாடப்படும் இந்துக்களின் ஒரு புனிதமான பண்டிகையாகும், இந்த பண்டிகையை நாடு முழுவதும் உள்ள இந்துக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்கின்றனர். முழு உற்சாகத்துடனும் பிரமாண்டத்துடனும் கொண்டாடப்படுகிறது தீபாவளி.  தீயவற்றை அழித்து வெற்றி பெற்றதற்காகவும், விரக்தி நீங்கி மகிழ்ச்சி அடைந்ததற்காகவும், அறியாமை நீங்கி அறிவொளி பெற்றதாகவும் இந்த நாளை புனிதமாக கருதி தீப ஒளியில் பண்டிகையை வரவேற்று கொண்டாடுகின்றனர்.  இந்த வருடத்தில் தீபாவளி பண்டிகையானது வரும் அக்டோபர் 24ம் தேதி திங்கட்கிழமையன்று கொண்டாடப்பட உளது.

தீபாவளி பண்டிகை குறித்து காலம்காலமாக சில வரலாற்று கதைகள் கூறப்பட்டு வருகிறது, இந்த புனிதமான மகிழ்ச்சிகரமான நாளில் மக்கள் வீடுகளை சுத்தம் செய்து விளக்குகளால் அலங்கரிப்பது, சிறப்பு சடங்குகள் மற்றும் லட்சுமி பூஜை செய்வது, சுவையான உணவு வகைகள் மற்றும் இனிப்பு, கார வகைகளை தயார் செய்வது, புத்தாடை அணிந்துகொண்டு பட்டாசுகளை வெடிப்பது என உற்சாகமாக செய்கின்றனர்.  வட மாநிலங்களில் ஐந்து நாள் கொண்டாடப்படும் இந்த விழா தண்டேராஸுடன் தொடங்கி பாய் தூஜ் உடன் முடிவடைகிறது.  சிலர் தீபாவளி கொண்டாடப்படுவது நரகாசுரனை க்ரிஷணன் அழித்ததற்காக என்றும், சிலர் இராவணனை வென்ற பிறகு ராமர் அயோத்திக்கு வந்ததை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது என்று கூறுகின்றனர், ஆனால் இதுவரை நாம் அறிந்திடாத தீபாவளி பண்டிகை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | தாம்பரம் to திருநெல்வேலி; தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு தொடங்கியது

1) தீபாவளி முக்கியமாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது, இருப்பினும் சீக்கியம் மற்றும் ஜைனிசம் போன்ற பிற மதத்தினரும் இந்த பண்டிகையை ஆர்வத்துடன் கொண்டாடுகின்றனர்.

2) இந்தியா தவிர லீசெஸ்டர் எனும் நகரத்தில் தீபாவளி விமரிசையாக கொண்டாடப்படுகிறது, இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று இசை, நடன நிகழ்ச்சிகள் மற்றும் ஒளி நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

3) தீமையை அளித்து பெற்ற வெற்றி, ராமர் மற்றும் சீதை அயோத்திக்கு திரும்புதல், லக்ஷ்மி (செல்வத்தின் தெய்வம்) மற்றும் தன்வதாரி (ஆரோக்கியத்தின் தெய்வம்) பிறந்த நாள் போன்ற பல காரணங்களுக்காக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

4) தீபாவளி பண்டிகையை வெவ்வேறு பெயர்களில் மக்கள் கொண்டாடுகிறார்கள்.  உதாரணமாக, நேபாள மக்கள் தீபாவளி பண்டிகையை திகார் அல்லது ஸ்வந்தி என்றும், மேற்கு வங்க மக்கள் காளி பூஜையாகக் கடைப்பிடிக்கின்றனர்.  மலேசிய மக்கள் தீபாவளியை 'ஹரி தீபாவளி' என்று கொண்டாடுகிறார்கள், தாய்லாந்தில் உள்ள மக்கள் தீபாவளி பண்டிகையை 'லாம் கிரியோங்' என்று கொண்டாடுகிறார்கள், அவர்கள் பட்டாசுகளை வெடிப்பதைத் தவிர்த்து அதற்கு பதிலாக வாழை இலைகளால் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றி கொண்டாடுகிறார்கள்.

5) மிகவும் பிரபலமான பொற்கோயிலின் அடித்தளம் தீபாவளி பண்டிகை நாளில் தான் கட்டப்பட்டது.

6) தீபாவளி ஒரு புதிய நிதியாண்டின் தொடக்கமாக சிலரால் கருதப்படுகிறது, மேலும் இதனை மக்கள் குளிர்காலத்தின் தொடக்கமாகவும் புதிய விதைப்பு பருவமாகவும் கருதுகின்றனர்.

7) கயானா, பிஜி, நேபாளம், சிங்கப்பூர், மொரிஷியஸ், மியான்மர், இலங்கை, சுரினாம், மலேசியா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ போன்ற 11 நாடுகளில் தீபாவளி தேசிய விடுமுறையாக அனுசரிக்கப்படுகிறது.

8) ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்பு முதல் தீபாவளி கொண்டாடப்பட்டது, அப்போது மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றி, ரங்கோலி கோலங்கள் போட்டு, இனிப்புகளை பரிமாறி, புதிய ஆடைகளை அணிந்து, சுவையான உணவுகள் தயாரித்து, லட்சுமி தேவி பூஜையுடன் இப்பண்டிகையை கொண்டாடினார்கள்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தீபாவளி பரிசு, அரசு தொடங்கிய சிறப்பு திட்டம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More