Home> Lifestyle
Advertisement

ரயில்களில் ஏசி பெட்டியில் படுக்கை கம்பளி போர்வை சேவைகள் மீண்டும் தொடங்கப்படுகிறது

தென்னிந்திய ரயில்வே, பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்துள்ளது. இனி ரயில் பயணத்தின்போது போர்வைகள் மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.

ரயில்களில் ஏசி பெட்டியில் படுக்கை  கம்பளி போர்வை சேவைகள் மீண்டும் தொடங்கப்படுகிறது

சென்னை: தென்னிந்திய ரயில்வே, பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவித்துள்ளது. இனி ரயில் பயணத்தின்போது போர்வைகள் மற்றும் படுக்கை வசதிகள் மீண்டும் தொடங்கப்படும் என அறிவித்துள்ளது.

ரயில்வே சார்பில், ரயில்களின் ஏசி பெட்டிகளில் போர்வைகள் மற்றும் லினன் (படுக்கைக்கான விரிப்புகள்) வழங்கும் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, தொலைதூர ரயில்களில் இந்த சேவை மார்ச் மாதம் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வசதிகள் படிப்படியாக அமல்படுத்த உத்தரவு 

ரயில்வே வழங்கி வந்த இந்த வசதி 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, ரயில் பெட்டிகளில் 'ஏசி' பெட்டியில் பயணிப்பவர்களுக்கு, படுக்கை விரிப்பு, போர்வை, திரைச்சீலைகள் வழங்கும் பணியை படிப்படியாக மீண்டும் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ரயில் நிலையத்தில் இனி விமான டிக்கெட் புக் செய்யலாம்

கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பிறகு, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு நிலைமை மேம்பட்டதும், ரயில் சேவைகள் தொடங்கப்பட்டாலும், தொற்றுப் ப்ரவலை தடுக்கும் வகையில் படுக்கை விரிப்பு, கம்பளி போர்வை வழங்கும் சேவைகள் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

நிறுத்தப்பட்ட சேவைகளை தற்போது படிப்படியாக மீண்டும் வழங்கவிருப்பதாக தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில்களில், எப்போது முதல் இந்த வசதிகள் வழங்கப்படும் என்ற அறிவிக்கை இது...

fallbacks

1. நெல்லை எக்ஸ்பிரஸ் - 19.05.22 முதல்,
2. பொதிகை எக்ஸ்பிரஸ் -  21.05.2022 முதல்,
3. நெல்லை -  ஸ்ரீ வைஷ்ணவ தேவி கத்ரா 23.05.22 முதல்,
4. மதுரை - புனலூர்  23.05.22 முதல்,
5. மதுரை - டெல்லி சம்பர்க் கிராந்தி 24.05.22 முதல்,
6. மதுரை சென்னை மஹால் எக்ஸ்பிரஸில் 26.05.22 முதல்

இந்த அட்டவணைப்படி, ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு மீண்டும் படுக்கை விரிப்புகள், கம்பளிப் போர்வைகள், தலையணைகள்  வழங்கப்படும்.

மேலும் படிக்க | Indian Railways: அடேங்கப்பா; இந்திய ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருவாய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More