Home> Lifestyle
Advertisement

ஆர்பிஐ-ன் புதிய விதியால் மகிழ்ச்சியில் கிரெடிட் கார்டு பயனர்கள்

வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்குவது குறித்து ஆர்பிஐ சில புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.  

ஆர்பிஐ-ன் புதிய விதியால் மகிழ்ச்சியில் கிரெடிட் கார்டு பயனர்கள்

வாடிக்கையாளர்கள் சம்மதம் இன்றி நிறுவனங்கள் அவர்களுக்கு கிரெடிட் கார்டுகளை வழங்கவோ அல்லது கிரெடிட் கார்டுகளில் மேம்பாடு செய்யவோ கூடாது என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.  கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக ஆர்பிஐ 'கேட்கப்படாத கார்டுகள்/மேம்பாடுகள் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளது.  ஆர்பிஐயின் இந்த புதிய விதிகள் 2022, ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.  மேலும் ஆர்பிஐ விதித்துள்ள புதிய விதிகளால் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

fallbacks

மேலும் படிக்க | Bank Holidays: மே மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை

கிரெடிட் கார்டுகளை வழங்குபவர்கள் கார்டுக்கான விண்ணப்பத்துடன் ஒரு உண்மை அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.  அதில் வட்டி விகிதம், கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.  கிரெடிட் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் என்னவென்று எழுத்துபூர்வமாக கிரெடிட் கார்டு வழங்குபவர்கள் தெரிவிக்க வேண்டும்.  கார்டுகள் தொலைந்துபோனாலோ அல்லது கார்டு மோசடி ஏற்பட்டாலோ அதனால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய வாடிக்கையாளரின் விருப்பத்திற்கிணங்க காப்பீட்டு தொகை வழங்குவது குறித்து கார்டு வழங்குபவர் ஆலோசிக்கலாம்.  மேலும் கேட்கப்படாத கார்டுகள் யாருடைய பெயரில் வழங்கப்படுகிறதோ அந்த கார்டு அந்த குறிப்பிட்ட நபரை சென்றடையும் முன்னரே தவறாக பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

அவ்வாறு தவறாக பயன்படுத்தப்பட்டு இழப்பீடு ஏற்பட்டால் கார்டு வழங்குபவர்கள் தான் முழு பொறுப்பினையும் ஏற்க வேண்டும், யார் பெயரில் கார்டு உள்ளதோ அவருக்கும் இதுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.  கார்டு வழங்குபவர்கள், கிரெடிட் கார்டை செயல்படுத்துவதற்கு வாடிக்கையாளரிடம் இருந்து ஒரு முறை ஓடிபி எண்ணை பெற வேண்டும், பின்னர் கார்டு வழங்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்கு மேல் வாடிக்கையாளர்களால் கார்டு செயல்படுத்தப்படாமல் இருந்தால். வாடிக்கையாளர் கார்டை பயன்படுத்தவில்லை என ஏழு வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளருக்கு எந்தச் செலவும் இன்றி கிரெடிட் கார்டு அக்கவுண்டை கார்டு வழங்குபவர்கள் மூடிவிடுவார்கள்.

fallbacks

கார்டை செயல்படுத்துவதற்கு முன்னர் கார்டு வழங்குபவர்கள் கிரெடிட் கார்டு குறித்த எவ்வித தகவல்களையும் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு தெரிவிக்க கூடாது.  கார்டுகள் வழங்கப்பட்டதற்கான ஒப்புதல் மறைமுகமானதாக இல்லாமல் வெளிப்டையானதாக இருக்க வேண்டும்.  கார்டு பெறுபவரிடம் எழுத்து பூர்வமாக ஒப்புதல் வாங்க வேண்டும்.  டெலிகாம் ரெகுலேட்டரி அத்தாரிட்டி ஆஃப் இந்தியா அடிக்கடி வழங்கும் வழிகாட்டு நெறிமுறைகளை கார்டு வழங்குபவர்கள் பின்பற்ற வேண்டும்.  வாடிக்கியாளரின் அனுமதி இல்லாமல் கார்டு வழங்குபவர்கள் அவர்களுக்கு அளவுக்கு மீறிய கடன்களை கொடுத்துவிட கூடாது என்று பல நிபந்தனைகளை ஆர்பிஐ விதித்துள்ளது.

மேலும் படிக்க | HDFC முதலீட்டாளர்களுக்கு சர்பிரைஸ்; வங்கி முக்கிய அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More