Home> Lifestyle
Advertisement

ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்த காதல் ஜோடி திருமணம்!!

ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்த காதலா்கள் தங்களது 26வது வயதில் திருமணம் செய்து கொண்டனா்!!

ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்த காதல் ஜோடி திருமணம்!!

ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்த காதலா்கள் தங்களது 26வது வயதில் திருமணம் செய்து கொண்டனா்!!

லண்டனைச் சேர்ந்தவர் ஷவுனா கிரேஸி மற்றும் டாம் மாகிர். இவர்கள் இருவரும் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி லண்டனின் உள்ள விகான் மருத்துவமனையில் சிறிய கால இடைவேளையிலே பிறந்து உள்ளனர். இந்தக் குழந்தைகளைத் தான் காதல் 18 ஆண்டுகளுக்குப் பின் இணைத்து உள்ளது. 

2010 ஆம் ஆண்டு தங்களது 18-வது வயதில் முதன்முதலாக ஒரு விழாவில் மாறுவேட நிகழ்ச்சிக்காகக் கலந்துகொண்ட போது சந்தித்துக்கொண்டுள்ளனர். முதலில் டாம் தான் ஷவுனாவிடம் பேச முயற்சித்துள்ளார். ஆனால், ஷவுனா டாமிடம் பேசுவதைத் தவிர்த்தே வந்துள்ளார். 

fallbacks

இதன் பின்னர் பல கட்ட முயற்சிகளுக்குப் பின்னர் ஷவுனாவின் காதலை வென்றார் டாம். சிறிது காலத்திலேயே இந்த ஜோடி தாங்கள் ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் பிறந்ததை அறிந்தவர்கள், தங்கள் காதல், சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தற்போது இந்த ஜோடி தங்களது 26 ஆம் வயதில் மண வாழ்க்கையில் இணைந்து உள்ளது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

 

Read More