Home> Lifestyle
Advertisement

கருணாநிதி இறப்புச் சான்றிதழ் வழங்கியது சென்னை மாநகராட்சி!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறப்புச் சான்றிதழை சென்னை மாநகராட்சி அளித்துள்ளது.

கருணாநிதி இறப்புச் சான்றிதழ் வழங்கியது சென்னை மாநகராட்சி!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறப்புச் சான்றிதழை சென்னை மாநகராட்சி அளித்துள்ளது.

fallbacks

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் கலைஞர் காலமானார். 

இதைத்தொடர்ந்து ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அரசு மரியாதையுடன் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் இறப்புச் சான்றிதழை சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. அதில், கருணாநிதியின் வயது 94வயது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவரது தாயார் அஞ்சுகத்தின் பெயர் முதலிலும், தந்தை முத்துவேல் பெயர் இரண்டாவதாகவும், மனைவி தயாளு அம்மாள் பெயர் மூன்றாவதாகவும் அந்த இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Read More