Home> Lifestyle
Advertisement

மோட்டார் வாகன விதிகளில் மாற்றம்; இனி வாகனத்திற்கும் வாரிசு தேர்வு

சாலை போக்குவரத்து அமைச்சகம் மோட்டார் வாகன விதிமுறைகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இப்போது வாகன உரிமையாளர் வாகனம் பதிவு செய்யும் போது தனது வாரிசு யார் என்பதையும் பதிவு செய்யலாம்

மோட்டார் வாகன விதிகளில் மாற்றம்; இனி வாகனத்திற்கும் வாரிசு தேர்வு

சாலை போக்குவரத்து அமைச்சகம் மோட்டார் வாகன விதிமுறைகளில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. இப்போது வாகன உரிமையாளர் வாகனம் பதிவு செய்யும் போது தனது வாரிசு யார் என்பதையும் பதிவு செய்யலாம்.

வாகன உரிமையாளர் இறந்த பிறகு, வாகனத்தின் பதிவை வாரிசு பெயரில் மாறுவது இனி எளிதாக இருக்கும். உங்கள் வாகனத்தை பதிவுசெய்த பிறகும், ஆன்லைன் போர்ட்டலுக்குச்  சென்று தகவல்களை உள்ளிடலாம்.

வாரிசை பதிவு செய்த பிறகும் அதைப் புதுப்பிக்க முடியும். இந்த விதியை அமல்படுத்துவதால், துரதிஷ்டவசமாக வாகன உரிமையாளர் இறந்து போனால், பிறகு, வாகனம் யாருக்கு சொந்தம் என்பதில் பிரச்சனை ஏதும் இருக்காது. சாலை போக்குவரத்து அமைச்சகம் வாரிசை பரிந்துரைக்கும்  ஆப்ஷனை தற்போது வழங்கியுள்ளது, இதனால் வருங்காலத்தில் சிக்கல்  ஏற்படாது. வாகனத்தின் பதிவு செய்யும் போது குறிப்பிடவில்லை என்றால், ஆன்லைன் மூலம் எப்போது வேண்டுமானாலும் அப்டேட் செய்யலாம்.

ALSO READ | Driving License: காலாவதியாகிறதா; ஆன்லைனில் எளிதாக அப்ளை செய்யலாம்

 

வாகன உரிமையாளரின் மரணத்திற்குப் பிறகு வாகனத்தின் பதிவை மாற்றும் செயல்முறை நீண்ட காலம் எடுக்கும். விதிப்படி, வாகன உரிமையாளர் இறந்த பிறகு, சட்ட வாரிசு என்பதற்கான சான்றிதழ் வேண்டும். இதற்குப் பிறகு, பதிவுக்கான போர்ட்டலுக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் தேவையான பிற ஆவணங்களை சம்ர்பித்த  30 நாட்களுக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆனால், இந்த விதியை அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, வாகன உரிமையாளர்களின் மரணத்திற்குப் பிறகு வாகனத்தின் வாரிசுக்கு பதிவை மாற்றுவது மிக எளிது. இது தொடர்பாக அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டுள்ளது. சமீபத்தில், சாலை போக்குவரத்து அமைச்சகம் மோட்டார் வாகன விதிகளில் பல மாற்றங்களைச் செய்துள்ளது, சாலை பயணத்தை பாதுகாப்பானதாக ஆக்கும் நோக்கில், அமைச்சகம் பல மாற்றங்களைச் செய்துள்ளது, இதனால் சாலை விபத்துக்களைக்  பெருமளவு கட்டுப்படுத்த முடியும்.

ALSO READ | அசத்தலான Apple iPad Pro, இப்போது இந்தியாவில், சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை விபரம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Read More