Home> Lifestyle
Advertisement

800ரூபாய் கேஷ்பேக் உடன் LPG கேஸ் சிலிண்டர் வாங்க செம்ம வாய்ப்பு!

Paytm வாடிக்கையாளர்களுக்கு கேஸ் சிலிண்டர்களை வாங்க ஒரு புதிய சலுகையை வழங்குகிறது.

800ரூபாய் கேஷ்பேக் உடன் LPG கேஸ் சிலிண்டர் வாங்க செம்ம வாய்ப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் பரவல் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. அந்தவகையில் இதில் முக்கிய விலை உயர்வு LPG சிலிண்டர் இல் ஏற்பட்டுள்ளது. இந்த LPG சிலிண்டர் தற்போது ரூ .800 க்கு மேல் விற்கப்படுகிறது.

வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் தரும் வகையில் Paytm புதிய சலுகையை வழங்குகிறது. அதன்படி Paytm வாடிக்கையாளர்கள் 809 ரூபாய்க்கு பதிலாக ரூ .9 க்கு மட்டுமே கேஸ் சிலிண்டர்களை வாங்க முடியும். இருப்பினும், நீங்கள் Paytm கேஷ்பேக் (Cashaback) வடிவத்தில் ரூ .800 தொகையைப் பெறுவீர்கள்.

ALSO READ | இனி, Google Pay, Paytm செயலிகளை பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கலாம்

PAYTM இல் எவ்வாறு சலுகைகளைப் பெறுவது
Paytm பயன்பாட்டின் மூலம் கேஸ் சிலிண்டரை (LPG Cylinder) முன்பதிவு செய்ய வேண்டும். நீங்கள் முதல் முறையாக Paytm பயன்பாட்டிலிருந்து கேஸ் புக்கிங் செய்கிறீர்கள் என்றால், முதலில் Google Play Store அல்லது Apple App Store இலிருந்து Paytm பயன்பாட்டைப் பதிவிறக்கவும். பிறகு புதிய கணக்கை உருவாக்கவும்.

கேஸ் புக்கிங் செய்ய இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:

*BOOK A GAS CYLINDER பக்கத்திற்குச் செல்லவும். இதற்குப் பிறகு நீங்கள் கேஸ் ஆபரேட்டரை தேர்வு செய்ய வேண்டும்.
*உங்கள் கண்சுமர் எண் அல்லது இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
*கேஸ் ஏஜென்சியைத் தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்வதற்கு தொடரவும் என்பதைக் கிளிக் செய்க.
*புக்கிங் செய்த பிறகு உங்களுக்கு ஸ்க்ரெட்ச் கார்டு கிடைக்கும். அதன் மூலம் ரூ .800 வரை கேஷ்பேக் பெறலாம். 
*கேஷ்பேக் பெற, நீங்கள் ரூ .500 க்கு மேல் செலுத்த வேண்டும், இந்த சலுகை மே 31 வரை பொருந்தும்.
* Paytm மூலம் எரிவாயு முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே சலுகையின் பலன்களைப் பெற முடியும்

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More