Home> Lifestyle
Advertisement

பண பரிவர்த்தனை விதிகள்... கவனமாக இல்லை என்றால் IT நோட்டீஸ் வரும்!

நிதி முறைகேடுகள் தொடர்பாக வருமான வரித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு பணத்தைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வருமான வரித்துறையின் கணகாணிப்பில் வருவார்கள்.

பண பரிவர்த்தனை விதிகள்... கவனமாக இல்லை என்றால் IT நோட்டீஸ் வரும்!

பண பரிவர்த்தனை தொடர்பான விதிகள்: வருமான வரித்துறை, வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள் போன்ற பல்வேறு முதலீட்டு தளங்கள் பொதுமக்களுக்கான பண பரிவர்த்தனை விதிகளில் சில முக்கியமான மாற்றங்களை செய்துள்ளது.  அதன்படி தற்போது முதலீட்டு மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள், மக்களை ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே பண பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கின்றன, இந்த வரம்பை மீறுபவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப நேரிடும்.  எனவே, பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். நிதி முறைகேடுகள் தொடர்பாக வருமான வரித்துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், பெரிய அளவிலான பரிவர்த்தனைகளுக்கு பணத்தைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் வருமான வரித்துறையின் கணகாணிப்பில் வருவார்கள். உங்கள் பரிவர்த்தனை வரலாற்றில் அதிக பண பரிவர்த்தனைகள் இருந்தால், பணத்தின் ஆதாரம் குறித்து உங்களிடம் கேட்கப்படலாம்.

நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக என்ன விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்..

வங்கி கணக்கு அல்லது FD இல் 10 லட்சத்திற்கு மேல் பணமாக முதலீடு

ஒரு நிதியாண்டில் உங்கள் வங்கிக் கணக்குகளில் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அதன் விவரங்களை வருமான வரித்துறை உங்களிடம் கேட்கலாம். நடப்புக் கணக்கில் அதன் அதிகபட்ச வரம்பு ரூ. 50 லட்சம். அதே நேரத்தில், எஃப்டியிலும், ஒரு வருடத்தில் ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக முதலீடு செய்ய முடியாது. இதை விட அதிக தொகையை டெபாசிட் செய்ய விரும்பினால், ஆன்லைனில் அல்லது காசோலை மூலம் செலுத்தலாம்.

கிரெடிட் கார்டு பில் செலுத்துதல் அல்லது முதலீட்டிற்கு பணத்தைப் பயன்படுத்துதல்

கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கு 1 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்க பணத்தைப் பயன்படுத்தினால், அதன் விவரங்களைக் கேட்கலாம். அதே சமயம் முதலீட்டுக்கு அதிக பணத்தை பயன்படுத்த முடியாது. நீங்கள் ஏதேனும் பங்குகள், பரஸ்பர நிதிகள் அல்லது பத்திரங்களில் பணப் பரிவர்த்தனை செய்தால், இதற்கும் ஒரு நிதியாண்டில் 10 லட்சத்திற்கு மேல் பணத்தைப் பயன்படுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி செய்தால் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.

மேலும் படிக்க | காலாவதியான கார்டுக்கு வந்த பில்... SBI கார்டுக்கு ₹2,00,000 அபராதம்!

சொத்துக்கு பணமாக செலுத்துவதற்கான விதிகள்

ரியல் எஸ்டேட் துறையில் பணம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஒரு சொத்தை வாங்குவதற்கு பணமாக செலுத்தினால், அதன் விதிகளை அறிந்து கொள்வது அவசியம். சொத்து பதிவாளரிடம் ரொக்கமாக பெரிய பரிவர்த்தனை செய்த பிறகு, அதன் அறிக்கை வருமான வரித் துறைக்கு செல்கிறது. 30 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்துக்களை நீங்கள் பணமாக கொடுத்து வாங்கினால் அல்லது விற்றால், அது குறித்த தகவல் வருமான வரித்துறைக்கு கிடைக்கும். இந்த விதிகளை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும் இல்லையெனில் நீங்கள் சிக்கலில் சிக்கலாம்.

மேலும் படிக்க | Google Payயில் RuPay கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்... வழிமுறை இதோ..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More