Home> Lifestyle
Advertisement

Numerology: புதனின் பரிவர்த்தனையால் பணமழையில் நனையப் போவது நீங்களா?

புதனின் சஞ்சாரத்தின் எதிரொலியாக மகிழ்ச்சி நீடிக்குமா? பணமழை பொழியுமா? அல்லது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா? தெரிந்துக் கொள்ளவும்

Numerology: புதனின் பரிவர்த்தனையால் பணமழையில் நனையப் போவது நீங்களா?

புதுடெல்லி: பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் புதன் திசையை மாற்றி பயணிக்கிறார். இதன் எதிரொலியால் மகிழ்ச்சி நீடிக்குமா? பணமழை பொழியுமா? அல்லது கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா? என கேள்விகள் எழலாம். எண் கணிதத்தின்படி உங்கள் அடுத்த வாரம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

புதன் திசை மாறிப் பயணிப்பதன் நேரடி தாக்கம் அனைவரின் மீதும் இருக்கும். இது தவிர, மற்ற கிரகங்களின் நிலைகளும் சுவாரஸ்யமாக உள்ளன.  

இந்த வாரம் ரேடிக்ஸ் 2 உள்ளவர்களுக்கு மன அழுத்தத்தைக் கொடுக்கும், அதே நேரத்தில் ரேடிக்ஸ் எண் 3 உள்ளவர்கள் தங்கள் குடும்பத்துடன் அற்புதமான நேரத்தை செலவிடுவார்கள். சிலருக்கு பணமும் கிடைக்கும்.

எண் கணிதத்தின்படி, ரேடிக்ஸ் 1 முதல் ரேடிக்ஸ் 9 வரை உள்ளவர்களுக்கு இந்த வாரம் (பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12 வரை) எப்படி இருக்கும் என்பதை நியூமராலஜி நிபுணர் ஆச்சார்யா அலோக் சொல்கிறார்.

பிறந்த தேதியின் கூட்டுத்தொகை தான் உங்களுடைய எண். உதாரணமாக, 15 ஆம் தேதி பிறந்தவருக்கு ரேடிக்ஸ் எண் 6  (1+5) ஆக இருக்கும். இதை ரேடிக்ஸ் (radix) என்று சொல்வோம்.

ALSO READ | வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் இந்த 3 ராசிக்காரர்களில் நீங்களும் ஒருவரா?

எண் 1 (radix 1): எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு இந்த வாரம் உகந்தது. வெளி நபர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேளுங்கள், ஆனால் உங்கள் மனம் சொல்வதையே செய்யுங்கள். இந்த வாரம் செய்யப்படும் திட்டங்கள் உங்கள் எதிர்காலத்தின் அடித்தளமாக மாறும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த நீலம்; அதிர்ஷ்ட எண்: 3

எண் 2 (radix 2): நீங்கள் ஒரு உணர்ச்சிவசப்பட்ட நபர் மற்றும் உணர்ச்சிகளால் அலைந்து திரிந்து எல்லாவற்றிற்கும் ஆம் என்று சொல்கிறீர்கள். இந்த வாரம் ஒரு புதிய பழக்கத்தை கற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள், உங்கள் இதயம் ஒப்புக்கொள்ளாத  விஷயத்தை மறுக்கவும். இல்லாவிட்டால் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு ; அதிர்ஷ்ட எண்: 5

எண் 3 (radix 3): இந்த வாரம் போராட்டமாக இருக்கும். பணிச்சுமை அதிகமாக இருக்கும். வேலையில் கவனமாக இருக்கவும். வியாழன் அன்று சிறிது ஓய்வு எடுத்து குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்.  

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்; அதிர்ஷ்ட எண்: 2

ALSO READ | புதன் கிரகத்தால் இன்று முதல் பெரிய மாற்றம் 

எண் 4 (radix 4): உங்கள் வாழ்க்கை துணையின் உடல்நலம் பற்றி நீங்கள் கவலைப்படுவீர்கள். பணியிடத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். கடந்த காலத்தில் செய்த காரியங்களால் ஆதாயம் அடைவீர்கள். 

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9

எண் 5 (radix 5): இந்த வாரம் உங்கள் மனதில் பணம தொடர்பான எண்ணமே நிறைந்திருக்கும். தலைவலி மற்றும் தூக்கக் கோளாறுகளால் நீங்கள் சிரமப்படுவீர்கள். வேலையில் ஏற்படும் பிரச்சனையோ, எரிச்சலோ பெரிய விஷயமல்ல. அதை உங்கள் உடலையும் மனதையும் பாதிக்க அனுமதிக்காதீர்கள். உயரதிகாரிகளிடம் பேசி பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3

எண் 6 (radix 6): உறவுகளில் நம்பிக்கை இல்லாவிட்டால், அவை ஒரு சுமையாக மாறும். இந்த வாரம் நீங்கள் உறவுகளில் நம்பிக்கை மற்றும் பரஸ்பர புரிதலின் முக்கியத்துவத்தை அனுபவிப்பீர்கள். சில தவறான புரிதல்களால் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்காது. எனவே அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம்.  

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் ஊதா அதிர்ஷ்ட எண்: 6

எண் 7 (radix 7): வேலைத் துறையில், உங்கள் சாதுர்யத்தால் அனைவரையும் அடக்கி வெற்றி பெறுவீர்கள். உங்கள் புதிய யோசனைகளை அனைவரும் பாராட்டுவார்கள். மேலதிகாரிகள் உங்கள் மீது நம்பிக்கை வைப்பார்கள். வாழ்க்கைத்துணை மூலம் சில நன்மைகள் ஏற்படும். இந்த வாரம் ரத்த அழுத்தத்தில் மாறுதல்கள் ஏற்படலாம். எனவே கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 5

ALSO READ | வாழ்நாள் முழுவதும் நிம்மதி வேண்டுமா? மறந்தும் இதை செய்யாதீர்கள்

எண் 8 (radix 8): இந்த வாரம், செலவுகளைக் குறைக்க முயற்சிக்கவும். முடிக்கப்படாத பழைய பணிகளை முடிப்பதற்கு இந்த வாரம் நல்லது. சொத்தில் கவனமாக முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்: 3

எண் 9 (radix 9): பணியிடத்தில் எதிர்பார்த்த வேலை இல்லாததால் மனம் மகிழ்ச்சியில்லாமல் இருக்கும். உடல்நலம் சம்பந்தமாக சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படும். இந்த வாரம் அனுமன் கோவிலுக்கு சென்று வாயு புத்திரனை வணங்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்: 3

(பொறுப்புத்துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)

ALSO READ | ராகுவின் இட மாற்றத்தால் 5 ராசிக்காரர்களுக்கு 'ஹை அலர்ட்' காலம்: உங்க ராசி என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More