Home> Lifestyle
Advertisement

SBI big change: வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி, இந்த விதியை மாற்றியது வங்கி!

SBI YONO App New Rule: எஸ்பிஐயின் யோனோ அப்ளிகேஷனில் (SBI YONO), வாடிக்கையாளர்கள் தற்போது வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே லாக்கின் செய்ய முடியும்.

SBI big change: வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி, இந்த விதியை மாற்றியது வங்கி!

SBI YONO App New Rule: புதுடெல்லி: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மிக முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காக வங்கி விதிகளில் முக்கிய மாற்றங்களை எஸ்பிஐ செய்துள்ளது. அதன்படி எஸ்பிஐயின் யோனோ அப்ளிகேஷனில் (SBI YONO), வாடிக்கையாளர்கள் தற்போது வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே லாக்கின் செய்ய முடியும். ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களை காப்பாற்ற வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து பாதுகாப்பு
எஸ்பிஐ (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளைக் கருத்தில் கொண்டு, இந்த புதிய மேம்படுத்தல் Yono செயலியில் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் பாதுகாப்பான வங்கி அனுபவத்தைப் பெறுவார்கள், மேலும் அவர்கள் ஆன்லைன் மோசடிகளுக்கு இரையாவதைத் தவிர்க்கலாம்.

ALSO READ: Home Loan Interest: குறைந்த வட்டி; வீட்டு கடனில் கலக்கும் பிரபல வங்கிகள் 

இது தொடர்பாக தகவலை வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது, அதில், புதிய மொபைல் எண் பதிவுக்கு, வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணை வங்கியில் பதிவு செய்த அதே தொலைபேசியைப் பயன்படுத்த வேண்டும்.

தொலைபேசி எண்களுக்கான விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன
தற்போது இந்த புதிய விதியின் கீழ், நீங்கள் எந்த ஃபோன் மூலமாகவும் செயலியில் Log in செய்ய முடியாது. அதன்படி இனி உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இருக்கும் அதே மொபைலில் இருந்து YONO வசதியைப் பயன்படுத்தலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை அதிகரித்து வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.

ALSO READ:SBI Alert: இனி பரிவர்த்தனைகளுக்கு அதிக தொகை செலுத்த வேண்டும் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More