Home> Lifestyle
Advertisement

Amarnath Yatra: பலத்த பாதுகாப்புக்கு இடையே யாத்திரை தொடங்கியது

அமர்நாத் புனித யாத்திரையின் முதல் குழு பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து வாகனங்களில் புறப்பட்டு சென்றது.

Amarnath Yatra: பலத்த பாதுகாப்புக்கு இடையே யாத்திரை தொடங்கியது

அமர்நாத் குடைவரைகள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் 5,000 ஆண்டு பழமையானதாகவும் இந்து புராண காலத்தில் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அமர்நாத் ஆசிரமத்தின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது.

இந்துப் புராணங்களின் படி இங்கு தான் சிவன் வாழ்வின் இரகசியங்களை பார்வதிக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது. பார்வதி, மற்றும் பிள்ளையார் பனிச்சிலைகளும் இங்கு உள்ளன. இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. 

அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள். 40 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும்.

இந்த வருட அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு, பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக்  கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன் இருக்ககும்படி மத்திய அரசு ராணுவ வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், புனித யாத்திரையின் முதல் குழு காஷ்மீர் மாநிலம், பகவதி நகரில் உள்ள பாகல்காம் மற்றும் பல்தல் அடிவார முகாம்களில் இருந்து வாகனங்களில் புறப்பட்டு சென்றது. முதல் குழுவை காஷ்மீர் மாநில தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம், ஆளுநரின் ஆலோசகர்களான வியாஸ், விஜய்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

 

 

இந்த அமர்நாத் யாத்திரை வரும் ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி நிறைவடைகிறது. 

Read More