Home> Lifestyle
Advertisement

Vastu Shastra: சமையலறையில் இவை மட்டும் தீரவே கூடாது, தீர்ந்தால் தீராது பிரச்சனைகள்

செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியின் அருள் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். லட்சுமி தேவியை மகிழ்விக்க மக்கள் பல சடங்குகளை செய்கிறார்கள். 

Vastu Shastra: சமையலறையில் இவை மட்டும் தீரவே கூடாது, தீர்ந்தால் தீராது பிரச்சனைகள்

புதுடெல்லி: செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வம் அன்னை லட்சுமி. அன்னை லட்சுமியின் அருளால் வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் நிலைத்திருக்கும். அன்னை லட்சுமி கோபம் கொண்டால் வீட்டில் வறுமை வரும். மக்கள் நிதி நெருக்கடியை சந்திக்க வேண்டிவரும். 

அதனால் செல்வத்தின் கடவுளான லட்சுமி தேவியின் அருள் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். லட்சுமி தேவியை மகிழ்விக்க மக்கள் பல சடங்குகளை செய்கிறார்கள். அன்னையை திருப்திபடுத்தினால் எப்போதும் பணத்திற்கு பஞ்சம் வராது என்று நம்பிக்கை. 

ஆனால் அன்னபூரணி அன்னை சமையலறையில் வசிப்பதால் வீட்டில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் இணைப்பு நம் சமையலறையுடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? வாஸ்து சாஸ்திரத்தின்படி  (Vastu Shastra), சமையலறையில் சில பொருட்களை முழுமையாக தீர்ந்துபோகு வரை வைத்திருக்கக் கூடாது. அவை தீரும் முன்னரே மீண்டும் அவற்றை நிரப்பிவிட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அது அசுபமாக கருதப்படுகின்றது.

ALSO READ: Kitchen Vastu: சப்பாத்தி செய்ய கூட சாஸ்திரம் இருக்கா? 

சமையலறையில் அரிசி / கோதுமை மாவு ஆகியவை எப்போதும் காலியாகக் கூடாது 

சமையலறையில் மிக முக்கியமான விஷயம் அரிசி. பெரும்பாலான வீடுகளில் எப்போதும் அரசி எப்போதும் இருக்கும் என்றாலும், சில சமயங்களில் பிஸியாக இருப்பதாலோ, கவனக்குறைவாலோ, அரிசியின் அளவு குறையும்போது, உரிய நேரத்தில் வாங்க முடியாமல், அரிசி தீர்ந்துவிடுகிறது. 

வாஸ்து சாஸ்திரத்தின்படி, அரிசி தீர்ந்துபோவதற்குள் அதை மீண்டும் வாங்கிவிட வேண்டும். நீங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரம் ஒருபோதும் காலியாக இருக்கக்கூடாது. அரிசி தீர்ந்து போனால் பணத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும். இது தவிர, மரியாதையும் குறையும்.

வீட்டில் மஞ்சள் தீர்ந்துபோவது அசுபமானது

மஞ்சளுக்கு (Turmeric) மருத்துவ குணம் உள்ளது. மஞ்சள் பெரும்பாலும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, மஞ்சளானது மங்களகரமான பணிகளுக்காகவும், வழிபாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. 

ஜோதிட சாஸ்திரத்தின் படி மஞ்சள் வியாழன் கிரகத்துடன் தொடர்புடையது. சமையலறையில் மஞ்சள் இல்லாமல் போனால், அதனால் குருதோஷம் ஏற்படும். மஞ்சள் இல்லாமல் போனால், அதனால் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆகையால் சமையலறையில் மஞ்சள் தீர்ந்து போகும் நிலையில் எப்போதும் வைத்துக்கொள்ளக் கூடாது.

சமையலறையில் உப்பு தீர்ந்துபோவது ஆபத்தானது

உப்பு (Salt) இல்லாமல் உணவின் சுவை முழுமையடையாது என்பதால் ஒவ்வொரு வீட்டிலும் உப்பு அவசியம் போதுமான அளவில் இருக்கும். சமையலறையில் ஒருபோதும் உப்பு தீர்ந்துவிடக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இல்லையெனில் வீட்டில் நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

ALSO READ: Vastu Tips: பர்ஸ் எப்போது நிறைந்திருக்க அதில் சிலவற்றை மறந்தும் வைக்கக் கூடாது 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More