Home> Lifestyle
Advertisement

ஏசியில் தினசரி அதிகம் நேரம் இருப்பவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரலாம்!

Side Effects of AC: வெயில் காலத்தில் ஏர் கண்டிஷனர்கள் உதவினாலும், பல்வேறு வழிகளில் நமது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கின்றன. இதனை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.  

ஏசியில் தினசரி அதிகம் நேரம் இருப்பவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரலாம்!

தற்போது வெப்பநிலையின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை வெயிலை பொருட்படுத்த முடியாமல் பலரும் தங்களது வீடுகளில் ஏசி பொருத்தி உள்ளனர். முன்பு ஆடம்பரமாக இருந்த ஏசி தற்போது அத்தியாவசியம் ஆகி உள்ளது. ஆனால் நீண்ட நேரம் ஏசியில் இருப்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். கடும் வெப்பத்தில் இருந்து உடலை தற்காத்து கொள்ள ஏசியை நாம் பயன்படுத்தி வருகிறோம். ஆனால் இதுவே நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அலுவலகம், கார், வீடு என சிலர் எங்கு சென்றாலும் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு மாறி உள்ளனர். இதனால் உங்களது தோல் கடுமையாக பாதிக்கப்படலாம். என்னதான் ஏசி வெயிலில் இருந்து பாதுகாப்பு அளித்தாலும், பல்வேறு வழிகளில் பாதிப்பை தான் கொடுக்கிறது. 

மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க கீர்த்தி சுரேஷ் தினமும் செய்த விஷயம்..எளிமையா இருக்கே..!

அதிக நேரம் ஏசியில் இருந்தால் ஏற்படும் பாதிப்புகள்

வறண்ட தோல் மற்றும் கண்கள்: ஏசி அறையில் அதிக நேரம் இருந்தால் காற்றில் ஈரப்பதம் குறைகிறது. இது சருமம் மற்றும் கண்கள் வறண்டு போக வழிவகுக்கும். ஈரப்பதம் இல்லாததால் தோல் வறண்டு, அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம். இதுதவிர, வறண்ட காற்றில் நீண்ட நேரம் இருந்தால் தோலழற்சி போன்ற தோல் நோய்களும் ஏற்பட  வாய்ப்புள்ளது. மேலும் வறண்டுபோகும் கண்களும் இந்த கோடை காலத்தில் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். ஈரப்பதம் குறைந்தால் அசௌகரியம் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.

மூட்டு வலி: அதிக நேரம் ஏசியில் இருந்தால் குளிர்ந்த காற்று தசைகள் மற்றும் மூட்டுகளை கடினமாகிவிடும். குறிப்பாக இந்த பாதிப்புகள் வெப்பநிலை மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு பெரும் பிரச்சனையாக மாறிவிடும். நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் அதில் இருந்து வரும் குளிர்ந்த காற்று தசைகள் மற்றும் மூட்டுகளுக்கு இரத்த ஓட்டத்தை குறைக்கலாம். இதனால் அதிகரித்த விறைப்பு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். கீல்வாதம் போன்ற மூட்டு பிச்சனைகள் உள்ளவர்களுக்கு ஏற்றது இல்லை. 

சுவாச பிரச்சனைகள்: வெளிப்புற காற்று இல்லாத மூடப்பட்ட அறைகளில் நீண்ட நேரம் இருந்தால் தூசி, ஒவ்வாமை மற்றும் பிற துகள்கள் காற்றில் இருக்கும். இதன் விளைவாக, ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை போன்ற சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு மேலும் பிரச்சனையை தீவிரமாக்கும். நீண்ட நேரம் ஏர் கண்டிஷனிங்கில் இருக்கும்போது மோசமான காற்றோட்டம் காரணமாக இந்த பிரச்சனைகள் ஏற்படலாம். 

நோய்த்தொற்று: பொதுவாக ஒருமுறை ஏசியை வீட்டில் பொறுத்திவிட்டால் அதில் பிரச்சனைகள் வராதவரை அதனை சர்வீஸ் செய்ய மாட்டோம். இதன் காரணமாக அசுத்தங்கள் குவிவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனை சுவாசித்தால் நோய்த்தொற்றுகள் மற்றும் பிற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

தலைவலி மற்றும் சோர்வு: ஏசி அறையில் நீண்ட நேரம் இருந்தால் தலைவலி மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கும். குளிர்ந்த காற்று இரத்த நாளங்களை சுருக்கி, மூளைக்கு இரத்த ஓட்டம் குறைவதற்கும் அதைத் தொடர்ந்து தலைவலிக்கும் வழிவகுக்கும். ஏசியில் இருந்து வரும் செயற்கையான குளிர்ச்சி சோர்வாகவும் மந்தமாகவும் உணர வைக்கும்.

மேலும் படிக்க | PF உறுப்பினர்களுக்காக தொடங்கப்பட்ட அட்டகாசமான வசதி: 6 கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More