Home> Lifestyle
Advertisement

புகைப்பிடிப்பதால் புற்றுநோய் மட்டுமில்லை! இந்த பிரச்சனைகளும் ஏற்படும்!

Smoking Side Effects: புகைபிடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆனால் புற்றுநோயை தாண்டி மேலும் சில பாதிப்புகள் வரும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.   

புகைப்பிடிப்பதால் புற்றுநோய் மட்டுமில்லை! இந்த பிரச்சனைகளும் ஏற்படும்!

Smoking Side Effects: புகைபிடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. அரசாங்கமும், பல தனியார் அமைப்புகளும் புகை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். சிகரெட்டில் நிகோடின் மற்றும் பல தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த புகை நேரடியாக உடலுக்குள் செல்லும் போது புற்றுநோய் ஏற்படுகிறது. ஆனால் புகைப்பிடிப்பதால் புற்றுநோய் மட்டுமில்லாமல் பல்வேறு உடல் நல பாதிப்புகளும் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தினசரி மற்றும் எப்போதாவது புகைப்பிடித்தாலும் சிகரெட்டில் உள்ள வேதி பொருட்கள் பல கடுமையான நோய்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. 

மேலும் படிக்க | சாப்பிட்ட பிறகு பல் துலக்கலாமா? மருத்துவரின் அறிவுரை!

புகையிலையில் உள்ள ஆயிரக்கணக்கான இரசாயனங்கள் நுரையீரலுக்குள் சென்று உடலுக்கு தீங்கு விளைவிக்கும். சிகரெட் பிடிப்பது உடலில் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இது ஒரு நபரின் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், பார்வை பிரச்சினைகள் மற்றும் ஈறு நோய் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆராய்ச்சிகளின் படி, சிகரெட் புகை உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் தீங்கு விளைவிக்கும் மற்றும் பல நோய்களை ஏற்படுத்துகிறது. இது புகைப்பிடிப்பவர்களின் ஆரோக்கியத்தை குறைக்கிறது. சிகரெட் புகை சுவாச அமைப்பு, இரத்த ஓட்ட அமைப்பு, இனப்பெருக்க அமைப்பு, தோல் மற்றும் கண்களை பாதிக்கிறது, மேலும் இது பல புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.

நுரையீரல் நோய்கள்: நுரையீரல் புற்றுநோய்க்கு புகைபிடிப்பது முக்கிய காரணமாக அமைகிறது. இது தவிர, நாள்பட்ட நுரையீரல் நோயின் தாக்கமும் அதிகரிக்கிறது. புகைபிடிப்பது நுரையீரலின் செயல்பாட்டைக் குறைத்து சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் புகைபிடித்தல் மூச்சுக்குழாய் அழற்சியின் அபாயத்தையும் அதிகரிக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மூச்சுக்குழாய் அழற்சி என்பது ஒரு சுவாச நோயாகும், இதில் நுரையீரலின் காற்றுப் பாதைகள் வீக்கமடைகின்றன. இது தவிர புகைபிடிக்கும் பழக்கம் எலும்புகளை மோசமாக பாதிக்கிறது.

பக்கவாதம்: சிகரெட்டில் உள்ள நிகோடின் என்ற வேதிப்பொருள் இரத்த அழுத்தத்தை உடலில் அதிகரிக்க செய்கிறது. இதனால் பக்கவாதம் மற்றும் இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. புகைபிடித்தல் இரத்த நாளங்களில் இரத்த உறைவு அபாயத்தை அதிகரிப்பதால் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம். மேலும் தினசரி புகைப்பிடிப்பதால் வாய் மற்றும் தொண்டை புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. புகைப்பிடிப்பதால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கருவுறுதலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக குழந்தையின்மை ஆபத்து அதிகரிக்கிறது.

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டூத்ப்ரஷ் பயன்படுத்தாமலே பற்கள் வெண்மையாக இருக்க சில வழிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More