Home> Lifestyle
Advertisement

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு! ஹீட் வேவ் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

தற்போது கோடை காலத்தில் அதிக வெப்பநிலை நிலவி வருகிறது. பல மாநிலங்களில் வெப்பம் 45 டிகிரிக்கு அதிகமாக உள்ளது. இதனால் பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு! ஹீட் வேவ் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி?

இந்த கோடை காலத்தில் இந்தியாவில் அதிக வெப்பம் இருந்து வருகிறது. தினசரி 47 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமான வெப்ப நிலையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வெப்ப அலை அனைத்து வயதினரையும் தாக்க வாய்ப்புள்ளது. இந்த வெப்ப அலையால் வெப்ப பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக இது கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எனவே பாதுகாப்பாக இருப்பது உடலுக்கு நல்லது.

மேலும் படிக்க | தொள தொள தசையை கல் போல வலிமையாக்க..‘இதை’ சாப்பிடலாம்!

ஹீட்வேவ் என்றால் என்ன?

தொடர்ந்து அதிகமான வெப்ப சூழ்நிலை நிலவினால் ஹீட்வேவ் என்று குறிப்பிடப்படுகிறது. பொதுவாக இரண்டு நாட்களுக்கு மேல் இந்த ஹீட்வேவ் நீடிக்கும். இது பலருக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக உள்ளது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இந்த இடங்களை தவிர எப்போதும் கூலிங்காக இருக்கும் இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதிகள் கூட அதிக வெப்பநிலை நிலவுகிறது. சிம்லாவில் 30.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், உனாவில் 44.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவி வருகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் ஜாக்கிரதை

மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்தியாவில் உள்ள 150 முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் சேமிப்பு கடந்த வாரம் 24 சதவீதம் குறைந்துள்ளது, இது பல மாநிலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை அதிகரிக்கிறது. அதே போல கர்ப்பகாலத்தில் பெண்கள் அதிக சிரமப்படுகின்றனர். அதிகமான வெப்ப அலையால் ​​உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு கர்ப்பிணி பெண் சரியான நீரேற்றத்துடன் இருக்கவில்லை என்றால் குமட்டல், வாந்தி, தலைவலி, சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் வாய் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது. வெப்பநிலை அதிகமாக இருந்தால் அது கருவின் வேகமான இதயத் துடிப்பு மற்றும் குழந்தைக்கு இரத்த ஓட்டம் குறைவதாக வெளிப்படும்.

அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க

முடிந்தவரை வெளியில் வருவதை கட்டுப்படுத்தி, ஏசி அறையில் இருக்க முயற்சி செய்யுங்கள். கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்ல வேண்டும் என்றால் வெயிலில் நேரடியாக படாமல் இருப்பது நல்லது. இதற்காக குடையைப் பயன்படுத்துவது நல்லது. முடிந்தவரை ஹைட்ரேட்ராக இருக்க முயற்சி செய்யுங்கள். தண்ணீர் மற்றும் எலக்ட்ரோலைட் பானங்கள் அதிகமாக உட்கொள்ளவும். முடிந்தவரை உடலை ஹீட் ஆகாமல் பார்த்து கொள்வது நல்லது. வெப்ப அலையில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டாலும் தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது நல்லது. 

மேலும் படிக்க | பெரிய தொப்பையை சீக்கிரமாக சின்னதாக்க..படுத்துக்கொண்டே செய்யக்கூடிய உடற்பயிற்சிகள்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More