Home> Lifestyle
Advertisement

ரயில் பயணிகளே இதையெல்லாம் கொண்டு போகாதீங்க... அப்புறம் போலீஸ் கேஸ் தான்!

Indian Railways Rules And Regulations: நீங்கள் ரயிலில் பயணிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பவர்கள் என்றால், இந்த விதியினை நீங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும்.

ரயில் பயணிகளே இதையெல்லாம் கொண்டு போகாதீங்க... அப்புறம் போலீஸ் கேஸ் தான்!

Indian Railways Rules And Regulations: இந்திய ரயில்வேயில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், அந்த பயணிகளிடம் நிறைய சரக்குகள், சாமான்களும் இருக்கும். அதே சமயம், தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிப்பதால், அவர்களின் பாதுகாப்பிலும் ரயில்வே துறை அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நீங்கள் ரயிலில் பயணிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பவர்கள் என்றால், இதை நீங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். 

ரயிலில் பயணம் செய்வதற்கும் சில விதிகள் உள்ளன. ஒவ்வொரு பயணிகளும் பின்பற்ற வேண்டிய மிக முக்கியமான விதிகள் எனவும் சில இருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், ரயில்வேயின் ஒரு முக்கியமான விதியை பற்றி இங்கு காணலாம். இந்த விதியின் கீழ், ரயில்வேயில் சில பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களுடன் யாராவது சென்றால், ரயில்வே சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

இந்த பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன

ரயிலில் பட்டாசுகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் வெடி பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயிலில் இந்த பொருட்களை கொண்டு பயணிக்க முடியாது. இதில் கேஸ் சிலிண்டர்கள், அடுப்புகள், விளக்குகள், பட்டாசுகள், மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் லைட்டர்களும் அடங்கும். யாரேனும் இந்த பொருட்களை வைத்திருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ரயிலில் இந்தப் பொருட்களைக் கொண்டு பயணம் செய்வது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும்.

தண்டனை

ரயில்வே சட்டம் 1989-ன் கீழ், 67, 154,164 மற்றும் 165 ஆகிய பிரிவுகளின் கீழ், ரயிலில் எரியக்கூடிய பொருட்கள் மற்றும் வெடிப் பொருட்களை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ரயிலில் யாரேனும் இந்த பொருட்களை வைத்திருந்தால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது 1 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.

மேலும் படிக்க | ரயில் பெட்டிகளில் உள்ள ஐந்து இலக்க எண்ணின் ரகசியம்..கட்டாயம் தெரிஞ்சிகோங்க

இதுபோன்ற சூழ்நிலையில், ரயிலில் இந்த சரக்குகளுடன் பயணிக்க வேண்டாம் என ரயில்வே சார்பில் மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இதனால், தனக்கும் மற்றவர்களுக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்படும். மேலும், இந்த வெடிபொருட்களால் எந்த பெரிய விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், ரயில்வேயில் பயணிகள் இந்த பொருட்களை கொண்டு செல்ல முடியாது.

இதுமட்டுமின்றி, இந்தியா முழுவதும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்காக இந்திய ரயில்வேயால் புதிய விதிகள் நிறுவப்பட்டுள்ளன. சரியான பொது நடத்தையை பராமரிக்க பயணிகள் கடைபிடிக்க வேண்டிய இரவு நேர விதிமுறைகளை குறிப்பிட்டுள்ளது.  அதில், கொண்டுப்போகும் லக்கேஜ் விதிகளும் ஒன்று. 

லக்கேஜ் விதிகள்

ஏசி கோச்சில், ஒவ்வொரு பயணியும் 70 கிலோ வரை பொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது.  ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ வரையிலும், இரண்டாம் வகுப்பில் 35 கிலோ வரையிலும் சாமான்கள் இலவசம். கூடுதல் லக்கேஜ் கட்டணத்துடன் பயணிகள் 150 கிலோ லக்கேஜையும், ஸ்லீப்பரில் 80 கிலோவையும், Second Seater-இல் 70 கிலோவையும் கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள். 

முக்கிய விதிகள்

- பயணிகள் தங்கள் இருக்கைகள், பெட்டிகளில் இருக்கும்போது, மற்றவர்களுடன் தொலைபேசியில் உரையாடும்போதும் அல்லது சக பயணிகளுடன் பேசும்போதும் உரத்த தொனியில் சத்தமாக பேசி அனுமதியில்லை.

- பயணிகள் ஹெட்ஃபோன்கள் இல்லாமல் அதிக சத்தத்தில் பாட்டு, படங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை கேட்கவோ, பார்க்கவோ கூடாது.

- இரவு விளக்குகள் தவிர, பயணிகள் யாரும் இரவு 10 மணிக்கு மேல் விளக்குகளை போட அனுமதியில்லை. 

மேலும் படிக்க | ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இனி ரயிலில் இந்த சேவைகள் இருக்காது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More