Home> Lifestyle
Advertisement

திருமணத்திற்கு பிறகு பான் கார்டில் பெயரை மாற்றுவது எப்படி?

திருமணத்திற்கு பிறகு ஒரு பெண் பான் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான தனிநபர் ஆவணங்களில் பெயரை அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.  

திருமணத்திற்கு பிறகு பான் கார்டில் பெயரை மாற்றுவது எப்படி?

பொதுவாகவே நமது சமுதாயத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டால் அதன் பிறகு அந்த பெண் தனது கணவனுடைய பெயரை தன் பெயருடன் சேர்த்துக்கொள்வார்கள்.  எழுதும்போது மட்டும் கணவன் பெயரை தன் பெயருடன் இணைத்து எழுதுவது மட்டுமின்றி இதனை அவர் தனது பான் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கியமான தனிநபர் ஆவணங்களில் அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.  இப்போது திருமணத்திற்கு பின்னர் ஒரு பெண் பான் கார்டில் தனது பெயரை மாற்ற என்னென்ன செய்யவேண்டும் என்பதை பற்றி காண்போம்.

மேலும் படிக்க | வங்கி கணக்குடன் ஆதாரை இணைப்பது எப்படி? எந்த ஆவணங்கள் தேவை 

1) பான் கார்டில் மாற்றங்களைச் செய்ய TIN-NSDL இணையதளம் அல்லது UTIITSL க்கு செல்ல வேண்டும்.

2) அதிலுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான துணை ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

3) பின்னர் பான் எண்ணை படிவத்தில் நிரப்பி, உங்கள் பெயருக்கு எதிராக உள்ள செல்லை மட்டும் டிக் செய்ய வேண்டும்.

4) படிவத்தில் உள்ள தகவல்களை சரிபார்த்த பின்னர் 'வேலிடேட்' என்பதை கிளிக் செய்யவும், பின்னர் 'சப்மிட்' என்பதை கிளிக் செய்யவும்.

5) இப்போது இந்த செயல்முறைக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.  நெட்பேங்கிங், டெபிட்/கிரெடிட் கார்டு, கேஷ் கார்டு போன்றவற்றின் மூலம் பணம் செலுத்தலாம்.

6) பணம் செலுத்திய பிறகு, பான் விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுக்கவேண்டும்.

7) அந்த விண்ணப்பத்தில் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை ஒட்டி, கையெழுத்திட வேண்டும்.

8) மேலும் அதனுடன் தேவையான ஆவணச் சான்றுகளையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.

fallbacks

என்எஸ்டிஎல் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப விரும்பினால் நீங்கள் உங்களது விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும் அல்லது UDIITSL க்கு அதன் போர்ட்டல் மூலம் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.  விண்ணப்பிக்கும் நபர் இ-கேஒய்சி செய்ய வேண்டும்ம் இதை செய்தால் நீங்கள் கூடுதலாக எவ்வித ஆவணங்களையும் சமர்பிக்கவோ அல்லது என்எஸ்டிஎல்? UTIITSL க்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய தேவையில்லை.  டிஜிலாக்கர் அல்லது இ-சைன் போன்றவற்றை பயன்படுத்தி இ-கேஒய்சி செய்து கொள்ளலாம்.  திருமணத்திற்கு பிறகு பான் எண்ணை மாற்ற நீங்கள் உங்களது திருமண சான்றிதழ் அல்லது திருமண அழைப்பிதழ், கணவரின் பெயர் உள்ள பாஸ்போர்ட்டின் நகல் போன்ற ஆவணங்களை கொடுக்க வேண்டும்.

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More