Home> Lifestyle
Advertisement

பெரியார் குத்து பாடலுக்காக நடிகர் சிம்புக்கு பாராட்டு விருது..!

தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற திராவிடர் திருநாள் விழாவில் 'பெரியார் குத்து' பாடலை வெளியிட்ட நடிகர் சிம்புவுக்கு திராவிடா் கழகம் சாா்பில் பெரியாா் விருது வழங்கப்பட்டது.

தமிழா் திருநாளான பொங்கல் பண்டிகை திராவிடர் திருநாளாக திராவிடர் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது. சென்னை வேப்பரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்ற இந்த விழாவில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நடிகர் சிம்பு உள்பட பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்ணிமை, இயக்குனர் மீரா கதிரவன் ஆகியோருக்கு 2019ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வழங்கினார்.

மேலும் பெரியார் குத்துப் பாடலை தயாரித்த நடிகர் சிம்பு, பாடலாசிரியர் மதன் கார்க்கி, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், மொழிபெயர்ப்பாளர் சுப்பாராவ் ஆகியோருக்கும் பெரியார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Read More